அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேச கால் நடை வளர்ப்பாளர்களின் கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை உடனடியாக வழங்க கோரிக்கை-படம்

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்களுக்கு தமது கால் நடைகளுக்கான உரிய     மேய்ச்சல் நிலம் வழங்கப்படவில்லை எனவும் இதனால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக -நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (21) மாலை நானாட்டான் பிரதேச செயலகத்தில் கால் நடை வளர்ப்பாளர்களுக்கும்,பிரதேசச் செயலாளருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற இருந்தது.

இதன் போது நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் குறித்த கலந்துரையாடலுக்குச் சென்றிருந்தனர்.

எனினும் குறித்த கலந்துரையாடல்  திடீர் என இரத்துச் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இங்கு சென்ற நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் தமது விசனத்தை தெரிவித்தனர். இதன் போது பாதீக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கருத்து nரிவிக்கையில்,,,

மேய்ச்சல் நிலமாக அறிவிக்கப்பட்ட கட்டையடம்பன் பகுதியில் பெரும்போக விவசாயம் செய்வதற்கு அபிவிருத்தி வேலைகள் நடை பெற்று வருகின்றது.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கால் நடைகளுக்கு உரிய மேய்ச்சல் நிலம் இல்லாததால் கால் நடைகளும் அவற்றை பராமரிக்கும் பண்ணையாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட கட்டையடம்பன் பகுதியில் மேய்ச்சல் நிலம் இனங்காணப்பட்ட போதும் உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர்.

ஆனால் தற்போது மேய்ச்சல் நிலமாக இனங்காணப்பட்ட பகுதியில் பெரும்போக நெற்செய்கைக்கான அபிவிருத்தி வேலைகள் நடை பெற்று வருகிறது.

உரிய பகுதியை அளவீடு செய்து விரைவாக முடிக்க வேண்டிய வேளையில் சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் கால் நடைகளும் பண்ணையாளர்களும் பாதிக்கப்பபடுகின்றார்கள்.

எனவே தற்போது மழைக்காலம் என்பதினால் உடனடியாக நானாட்டான் பிரதேச கால்நடையாளர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்து வழங்க நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதீக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நானாட்டான் பிரதேச கால் நடை வளர்ப்பாளர்களின் கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை உடனடியாக வழங்க கோரிக்கை-படம் Reviewed by Author on October 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.