அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேர்தல் இடாப்பில் நீக்க்பட்டவர்களுக்கு விசாரனைகள் நடைபெறுகின்றன. உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு

2019 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கான
விசாரனைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான முடிவுகள் ஐனாதிபதியின் தேர்தல் முடிவுற்றதும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும் என மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்ரன் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட மன்னார் முஸ்லீம் மக்களின்இருபது வீதமானவர்களின் வாக்காளர்களின் பெயர்கள் 2109 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டதின் தொடர்பாக இதற்கு நிவாரணம் பெறும் நோக்கத்துக்கான கோரிக்கைக் கடிதம் மன்னார் சிரேஷ;ட சத்தத்தரணியும் முன்னாள் வன்னி பாராளுமன்னற உறுப்பினருமான ஹுனைஸ் பாறூக் மன்னார் உதவி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்திருந்தார்.

இது விடயமாக மன்னார் உதவி தேர்தல் ஆணையாளரிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது

1980 ஆம் அண்டு 15 வது இலக்க சட்டத்தின் பிரகாரம் இவ் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனையின் பேரில் விஷேட கணக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.
இதன் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட நபர்களின் பெயர்கள் வாக்காளர்
இடாப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டாலும் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றது.

அதாவது அவர்களுக்கு உங்கள் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து
நீக்கப்பட்டுள்ளது எனவும் நீங்கள் உரிமை கோரிக்கை சமர்பிக்கும்படி கோரி
ஏற்கனவே அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கு மேலாக இவர்களை விசாரனைக்கு வரும்படி பதிவுத் தபாலில் கடிதங்களும் அனுப்பப்ட்டன.

அத்துடன் இவர்களுக்கான விசாரனைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ் விசாரனைகளின் முடிவுகள் தற்பொழுது தேர்தல் காலமாக இருப்பதால் காலதாமதமாகியுள்ளன.

தேர்தல் முடிவுற்றதும் இவர்களின் விசாரனைகளின் முடிவுகள் இவர்களுக்கு
அனுப்பப்படும். இப்பொழுது எத்தனை பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதை தப்பொழுது கூறமுடியாதுள்ளது எனத் தெரிவித்தார்.


மன்னாரில் தேர்தல் இடாப்பில் நீக்க்பட்டவர்களுக்கு விசாரனைகள் நடைபெறுகின்றன. உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு Reviewed by Author on October 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.