அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்திசாலையில் இறந்த ஒரு வயது குழந்தையின் மரணத்தில் சந்தேகம். உடற்கூற்றை கொழும்புக்கு அனுப்ப பணிப்புரை.

சிறு குழந்தைக்கான தடுப்பூசி போடப்பட்டதைத் தொடாந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இக் குழந்தை இரு தினங்களுக்குப் பின்  மரணிக்க வேண்டியதின் மருமம் என்ன இது கண்டறிப்பட வேண்டும் என இறந்த குழந்தையின் பெற்றோர் மரண விசாரனை அதிகாரியிடம் விசாரனையின்போது வேண்டுகோள்.

இவ் சம்பவம்பற்றி இறந்த குழந்தையின் தாயார் மரண விசாரனை அதிகாரிக்கு முறைப்பாட்டிலிருந்து தெரியவருவதாவது
 கடந்த வியாழக் கிழமை (10.10.2019) எனது பெண் குழந்தைகளுக்கான தடுப்பு
ஊசியை பேசாலை மாவட்ட வைத்தியசாலையில் போடப்பட்டேன்

ஆனால் வெள்ளிக் கிழமை இவ் தடுப்பூசி போடப்பட்ட ஒரு வயது இந்த குழந்தைக்கு மூச்சு திணரல் ஏற்பட்டதும் இவ் குழந்தையை மீண்டும் பேசாலை
வைத்தியசாலைக்கு எடுத்து வந்தேன். இவ் குழந்தைக்கு மேலதிக சிகிச்சைக்காக அன்றே மன்னார் பொது வைத்தியசாலைக்கு  அனுப்பப்பட்டுள்ளது.

அன்று இவ் குழந்தை அவசர சிகிச்சை பகுதியில் சேர்க்கப்பட்டபின் இவ்
குழந்தையை 7 ஆம் வாட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டது.
பின் சனிக்கிழமை இவ் குழந்தையை கண்டிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டதுடன் இவருக்கு ஒரு  மயக்க ஊசியும் போட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவம் அன்று குழந்தையை தன்னிடமிருந்து கொண்டு சென்ற பின்பே சனிக்கிழமை நண்பகல் தனது குழந்தை இறந்துள்ளதாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாக குழந்தையின் தாயார் ஜெ.மேரி மெக்டலீன் இவ்வாறு முசலி பிரதேச மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர்.நசீரிடம் மரண விசாரனை வேளையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்களது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மரண விசாரனை அதிகாரி ஏ.ஆர்.நசீர்
குழந்தையின் உடற்கூற்றை மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பும்படி மன்னார் சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரை வழங்கியதுடன் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்கவும் கட்டளை பிறப்பித்தார்.
 இப்படியே தொட்ர்ந்தால் மக்களின் நிலை என்னா...?
இது யார் தவறு....?
என்ன முடிவு....?
முடிவே இல்லையா....?



மன்னார் பொது வைத்திசாலையில் இறந்த ஒரு வயது குழந்தையின் மரணத்தில் சந்தேகம். உடற்கூற்றை கொழும்புக்கு அனுப்ப பணிப்புரை. Reviewed by Author on October 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.