அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை பிரிவில் பராமரிப்பற்ற நிலையில் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-


மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற நிலையில், அயலவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் காணிகள் மன்னார் நகர சபையினால் கையகப் படுத்தப்படவுள்ளதோடு, குறித்த காணியின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பல கிராமங்களில் மக்கள் இல்லாத நிலையில் வெற்றுக்காணிகள் காணப்படுகின்றது.குறித்த காணிகள் பற்றை வளர்ந்த நிலையில் பாரிய கடுகளாக காணப்படுகின்றது.

இதனால் குறித்த காணிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக குறித்த காணிகள் வசிப்பதற்கான சாதாரண சூழல் காணப்படாமை,டெங்கு நுளம்பின் தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்தமை, பற்றை காணிகளாக காணப்படுவதினால் விசப் பூச்சிகளின் அதிகரிப்பு, இரவு நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய திருடர்களின் நடமாட்டம்,சட்ட விரோத செயல்கள் உற்பட பல்வேறு பிரச்சினைகள் இடம் பெறுவதாக பாதீக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனவே மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பராமரிப்பு இல்லாத நிலையில் காணப்படும் காணிகளின் உரிமையாளர்கள் குறித்த காணிகளை துப்பரவு செய்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.

அவ்வாறு பாராமரிக்காது பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் காணிகள் மன்னார் நகர சபையினால் அடையாளப்படுத்தப்பட்டு நகர சபையினால் வழங்கப்படும் கால அவசாகத்திற்கு அமைய துப்பரவு பணிகள் மேற்கொள்ளாத பட்சத்தில் அயலவர்களுக்கு பாதீப்பை ஏற்படுத்தும் காணிகள் மன்னார் நகர சபையினால் கையகப்படுத்தப்படவுள்ளதோடு, குறித்த காணியின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

மன்னார் மூர்வீதியில் அவ்வாறான காணி அடையாளம் காணப்பட்டு காணி உரிமையாளரின் விசேட கவனத்திற்கும் அறிவூறுத்தல்களுக்கும் கொண்டு செல்லப்பட்டதோடு,குறித்த காணியை துப்பரவு செய்ய 21 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டு கட்டளை துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த கால அவகாசத்தில் குறித்த காணியின் உரிமையாளர் குறித்த காணியை துப்பரவு செய்யாத பட்சத்தில் குறித்த காணியை மன்னார் நகர சபை கையகப்படுத்தி குறித்த காணியின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேலும் தெரிவித்தார்.

21/10/2019  திங்கட்கிழமை இடம் பெற்ற மன்னார் நகர சபையின் 20 ஆவது அமர்வின் போது மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற நிலையில் காணிகள் காணப்படுவதாகவும் இதனால் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருவதாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் நகர சபை பிரிவில் பராமரிப்பற்ற நிலையில் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- Reviewed by Author on October 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.