அண்மைய செய்திகள்

recent
-

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்! போராட்டத்தை கைவிடுமாறு ஞானசார தேரர் வலியுறுத்தல் -


நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்த, கொலம்பகே மேதாலங்கார தேரர் அண்மையில் புற்றுநோயால் உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த தேரரின் உடலை ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு தடைவிதிக்கக் கோரி, ஆலய நிர்வாகம் சார்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர், ஆலய வளாகத்தில், பௌத்த பிக்குவின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று நீதிவான் உத்தரவிட்டார்.
எனினும், நீதிமன்றக் கட்டளை எழுத்து மூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குகளும், சிங்கள மக்களும் இணைந்து, பிக்குவின் சடலத்தை ஆலய வளாகப் பகுதியில் தகனம் செய்தனர்.
இவ்விடயம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துவருகின்றது. இது குறித்த விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது.

வெகு நேரத்தின் பின்னர் அங்கு பூதவுடலைத் தகனம் செய்வதற்கான பிரதேசத்தைத் தெரிவு செய்யுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அதற்குள் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.
தற்போது இவையனைத்தும் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், அதனை அப்படியே விட்டுவிட வேண்டும். இவ்விகாரத்தினால் அங்கு தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் எவ்வித முரண்பாடுகளும் வெடிக்கவில்லை.
எனவே தேவையின்றிப் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்! போராட்டத்தை கைவிடுமாறு ஞானசார தேரர் வலியுறுத்தல் - Reviewed by Author on October 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.