அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை முதல்வருக்கும் ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான துணை தூதுவருக்குமிடையில் விசேட சந்திப்பு-படம்

மன்னார் நகர சபை முதல்வர் ஞா.அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான துணை தூதுவர் அன்றியாஸ் பேர்க்  ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு நேற்று வியாழக்கிழமை   மன்னார் நகர முதல்வரின் அலுவலகத்தில் நடை பெற்றது.

குறித்த சந்திப்பின் போது மன்னாரின் தற்போதைய அரசியல் நிலை , அபிவிருத்தி , பொருளாதாரம் மற்றும் மக்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு பல சவால்கள் உள்ளதாகவும் ,வழங்கப்படும் அபிவிருத்தி வேலைகள் பங்கீட்டில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் , ஒரு சில அரசியல் வாதிகள்  முற்று முழுதாக தமது இனத்திற்கு மட்டும் அபிவிருத்தி திட்டங்களையும் வீட்டுத்திட்டங்களையும் வேலை வாய்ப்புக்களையும் வழங்குவதாகவும் நகர முதல்வர் தெரிவித்தார்.

மன்னார் நகரை அழகு படுத்த மேலும் தமக்கு வாகனங்களும் பணியாளர்களும் தேவைப்படுவதாகவும் நகர அபிவிருத்திக்கு அதிக பணம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் நகர முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

இதே வேளை தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்கவுள்ளது என தூதுவர் வினவினார்.

இதன் போது பதில் வழங்கிய நகர முதல்வர்  குறித்த விடையம் தொடர்பாக தலைமைப்பீடம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழருக்கு எந்த பயனுமில்லை எனவும் தெரிவித்தார்.

நகர முதல்வரால் முன்வைக்கப்பட்ட சகல கருத்துக்களையும் ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர்   ஏற்றுக்கொண்டார். தம்மால் முடிந்தளவிற்கு உதவி புரிவதாகவும் தெரிவித்தார்.

 அத்துடன் நகர முதல்வருடனான இச்சந்திப்பு தனக்கு மன்னாரின் உண்மைத்தன்மையை விளக்குவதாகவும் மக்களின் உண்மையான வாழ்க்கை முறையையும் அவர்களின் அடிப்படைத்தேவைகள் இன்னும் கவனிக்கப்படவேண்டியுள்ளது என்பதை தான் இதன் மூலம் அறிவதாகவும் தெரிவித்தார்.

நகர முதல்வரின் வெளிப்படைத்தன்மையும் உண்மைத்தன்மையும் சிறந்த ஆளுமைத்தன்மையும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறி நகர முதல்வரை தூதுவர் பாராட்டினார்.

மன்னார் நகர சபை முதல்வருக்கும் ஜேர்மன் நாட்டின் இலங்கைக்கான துணை தூதுவருக்குமிடையில் விசேட சந்திப்பு-படம் Reviewed by Author on October 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.