அண்மைய செய்திகள்

recent
-

98.5 மில்லியன் டொலர்களை வீடற்றவர்களுக்காக நன்கொடையாக அறிவித்த ஜெஃப் பெசோஸ்!


வீடற்றவர்களுக்கு உதவுவதற்காக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தன்னுடைய 98.5 மில்லியன் டொலர்களை நன்கொடையாக கொடுத்துள்ளார்.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரரும், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ், வீடற்ற குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுக்க உதவும் 32 அமைப்புகளுக்கு 98.5 மில்லியன் டொலர் நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.

பில்லியனரின் தொண்டு அறக்கட்டளையான 'பெசோஸ் டே 1 ஃபண்ட்' வியாழக்கிழமை நன்கொடைகளை அறிவித்தது. பெசோஸ் 2018 செப்டம்பரில் இந்த அறக்கட்டளையை அறிமுகப்படுத்தினார். அப்போது, இதற்கு 2 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்தார்.

இந்த அறக்கட்டளையானது, வீடற்ற குடும்பங்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு நிதியளித்தல் மற்றும் மாண்டிசோரி பாலர் பள்ளிகளை நிறுவுதல் என்ற இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு நன்கொடைகள் 23 மாநிலங்களில் 32 குழுக்களுக்குச் சென்றன. அவை 1.25 மில்லியன் டொலர் முதல் 5 மில்லியன் டொலர் வரை இருந்தன.
கடந்த ஆண்டு 16 மாநிலங்களில் உள்ள 24 அமைப்புகளுக்கு வீடற்ற தன்மைக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு பெசோஸ் 97.5 மில்லியன் டாலர்களை வழங்கியது.

ஆனால் இதுவரை இந்த நிதி மாண்டிசோரி பள்ளிகளை நிறுவுவதற்கு எந்த நன்கொடைகளையும் அறிவிக்கவில்லை.
பெசோஸ் 109 பில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்டுள்ளதால் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

98.5 மில்லியன் டொலர்களை வீடற்றவர்களுக்காக நன்கொடையாக அறிவித்த ஜெஃப் பெசோஸ்! Reviewed by Author on November 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.