அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கு கிடைத்த கெளரவம்: முதல் இந்தியர் என தகவல் -


முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, அமெரிக்காவில் இருக்கும் பெருநகர அருங்காட்சியகத்தின் முதல் இந்திய அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலககோடீஸ்வரரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை உலக அளவில் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலுள்ள பெருநகர கலை அருங்காட்சியகம் 1870-ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகன்கள், தொழிலதிபர்கள், நிதியாளர்களால் தொடங்கப்பட்டது.

அமெரிக்கா மக்களுக்கு, ஓவியர்கள் மூலம் கலைக் கல்வியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
தற்போது அந்த அருங்காட்சியகத்தில், 5,000 ஆண்டுகளை உள்ளடக்கும் வகையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கலைப் பொருள்கள் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் இணையதளம் வழியாகம் இந்த அருங்காட்சியகத்திலுள்ள கலைப் பொருள்களை கண்டு ரசிக்கின்றனர்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் 2016-ஆம் ஆண்டிலிருந்து இந்த அருங்காட்சியகத்துக்கு நிதி உதவி அளித்துவருகிறார்.
2017 ஆம் ஆண்டு இந்தியாவின் கலைப்பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கண்காட்சி அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கண்காட்சியில் கங்கையின் நவீனத்துவம் என்ற தலைப்பில் ரகுபீர் சிங் எடுத்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 149 ஆண்டுகள் பழமையான மெட்ரோபொலிடன் அருங்காட்சியக பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக பல்வேறு உதவிகளையும் நீடா அம்பானி செய்து வருகிறார். இதையடுத்து அவரை சிறப்பிக்கும் வகையில் அருங்காட்சியகத்திற்கான அறக்கட்டளையின் கௌரவ அறங்காவலராக நீடா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கு கிடைத்த கெளரவம்: முதல் இந்தியர் என தகவல் - Reviewed by Author on November 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.