அண்மைய செய்திகள்

recent
-

பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உண்டாக காரணம் என்ன? அதனை எப்படி சரி செய்வது?


இன்று பெண்களை மட்டும் தாக்கும் நோய்களுள் சினைப்பை நோயும் முதலிடம் வகிக்கின்றது.
அந்த சினைப்பை நோய்கள் மரபுவழி, சூழல் என இரண்டும் இணைந்த கூட்டுக்காரணிகளால் ஏற்படுகின்றன.
குறிப்பாக உடற்பருமன், போதுமான உடற்பயிற்சியின்மை, குடும்பத்தில் முன்பு எவருக்கேனும் இது காணப்பட்டிருத்தல் ஆகியவை இந்நோய்க்குறி பாதிப்பதற்கான அபாய காரணிகளாகும்.

இது 14 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்களே இந்தப் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், தொடக்கநிலையிலேயே சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவிடுகிறார்கள்.
இதனால் பின்னடைவில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகின்றது.
அந்தவகையில் பெணகளை தாக்கும் சின்னப்பை நீர்கட்டியின் அறிகுறிகள்? அதனை எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.
நீர்க்கட்டி என்றால் என்ன?
PCOD என்பது PCOS-ன் முந்தைய நிலைதான். கருப்பையில் கட்டிகள், இன்சுலின் செயல்திறன் பாதிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிலக்கு ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு இதன் காரணங்கள்.
உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதனால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன.
இதன் அறிகுறிகள் என்ன?
  • முகம், மார்பு ஆகிய பகுதிகளில் முடி வளர்ச்சி காணப்படுவது.
  • தீவிரமான முடி உதிர்தல் பிரச்சனை
  • சருமம் மற்றும் முடி சார்ந்த ஒவ்வாமைகள் ஏற்படுவது
  • உடல் எடை அதிகரித்துக்கொண்டே போவது
  • கர்ப்பப்பை விரிந்து அதில் சிறிது சிறிதாக நிறைய கட்டிகள் இருப்பது
  • ஒழுங்கற்ற மாதவிடாய்
  • கர்ப்பமாவதில் சிக்கல் உண்டாவது.
இதனால் ஏற்படும் பிரச்சினைகள்?
  • கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுக்கூடும். கர்ப்பமானாலும், கரு கலைந்துவிட வாய்ப்பிருக்கிறது.
  • பி.சி.ஓ.எஸ் பிரச்னை இருந்தால், உடலில் இன்சுலின் சுரக்கும் தன்மையில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களைவிட, கர்ப்பிணிகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • 30 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இதயப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
  •  
  • 40 வயதைத் தாண்டிய பெண் என்றால் சர்க்கரைநோய், இதயப் பிரச்சனைகள், உடலில் கெட்ட கொழுப்புச்சத்து அதிகமாவது, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
  • ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக, புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். நாட்பட கர்ப்பப்பை பாதிப்பும் சேர்ந்துகொள்ளும். இது, கர்ப்பப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
  • 14 வயதிலிருக்கும் பெண்களுக்கு, பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதீத ரத்தப்போக்குதான் அறிகுறிகளாக இருக்கும். எனவே, உடனே சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
எப்படி சரி செய்வது?
  • இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில் கொஞ்சம் தூவி கொள்ளலாம். ஏனெனில் இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதனால் பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்
  • ஆளி விதிகளை பொடி செய்து கொண்டு நீரிலோ, பழச்சாறிலோ கலந்து குடிக்கலாம்.ஏனெனில் ஆளி விதைகளில் காணப்படும் ஒமேகா மற்றும் புரத சத்துகள் உதவுகின்றன. உடலில் உள்ள குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது.
பெண்களுக்கு நீர்க்கட்டிகள் உண்டாக காரணம் என்ன? அதனை எப்படி சரி செய்வது? Reviewed by Author on November 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.