அண்மைய செய்திகள்

recent
-

6 பந்துக்கு 6 சிக்ஸர்! கடைசி கட்டத்தில் இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்த ஷர்துல் தாகூர்


மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூரின் திறமையை டோனி முன்பே அறிந்திருக்கிறார் என்று சென்னை ரசிகர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இதில் கோஹ்லி அவுட்டானவுடன் இந்தியா அணி தோற்றுவிடும் என்று நினைத்த போது, திடீரென்று நான் இருக்கிறேன் என்பது போல் 28 வயதான ஷர்துல் தாகூர் சிக்ஸர், பவுண்டரில் விளாசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார், 6 பந்தில் 17 ஓட்டங்கள் குவித்தார்.
இவர் அடித்த சிக்ஸர் மற்றும் பவுண்டரியின் போது, டிரஸிங் ரூமில் இருந்த கோஹ்லி, துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.






இந்நிலையில் இவரின் திறமையை அறிந்து தான் டோனி எப்போதே சென்னை அணிக்கு எடுத்து வைத்துக் கொண்டார் என்றும், கடந்த 2019-ஆம் ஆண்டின் ஐபிஎல்லின் இறுதி ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ஹர்பஜனைஇறக்காமல், ஷர்துல் தாகூரை டோனி இறக்கினார்.
ஆனால் அதில் அதிர்ஷ்டவசமாக ஷர்துல் தாகூர், மலிங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்ததால், சென்னை அணி கோப்பை இழந்தது.

இதனால் அப்போது டோனி ஹர்பஜனை இறக்கியிருந்தால், அணியின் முடிவு மாறியிருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இப்போது தெரிகிறதா? டோனி ஏன் இவரை அவருக்கு முன்னாள் இறக்கினார் என்று அப்போதைய கேள்விக்கு டோனி ரசிகர்கள் இப்போது பதில் அளித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த 2006-ஆம் ஆண்டு பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற Harris Shield schools cricket tournament போட்டியில் தாகூர் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர் தொடர்ந்து அடித்து அசத்தியுள்ளார். அந்த போட்டியில் 73 பந்துகளை சந்தித்த இவர் 160 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
அதில்,10 சிக்ஸர் 20 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
6 பந்துக்கு 6 சிக்ஸர்! கடைசி கட்டத்தில் இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்த ஷர்துல் தாகூர் Reviewed by Author on December 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.