அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற 6 இலங்கை அகதிகள் தனுஸ்கோடியில் கைது:-இலங்கை படகோட்டி தப்பி ஓட்டம்.

தனுஸ்கோடி  கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (15)  கியூ பிரிவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது  தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம்  பேரூந்த நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரனை செய்தனர்.

விசாரனையில்  அவர்கள் இலங்கை திருகோணமலை மற்றும் யாழ்பாணம்  பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகளான சதீசன்,டிலக்சனா,சுதாகரன்,சந்திரமதி,ஹரீஸ்கரன்,உதயகுமார் என இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை ஆகிய ஆறு பேரும்  சென்னை மற்றும் திருவள்ளுர் பகுதிகளில் உள்ள முகாம்களில் வசித்து வந்தாகவும், தனுஸ்கோடி கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் சட்ட விரோதமாக தோணியில் இலங்கைக்கு தப்பி செல்ல இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த  ஆறு பேரையும் கைது செய்த கீயூ பிரிவு பொலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்தில் வைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 விசாரனைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

  மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் காவல் துறையினர் விசாரனையின் போது தாங்கள் இலங்கையில் நடைபெற்ற  உள்நாட்டு போரின் போது தங்களது உயிர்களை காப்பாற்றி கொள்ள 2012 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும் தற்போது இலங்கையில்  பிரச்சினை இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தங்களது உறவினர்கள் கூறியதையடுத்து  இலங்கை திரும்பி செல்ல தனுஸ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் நின்றதாகவும் தெரிவித்தனர்.

 தமிழகத்தில் இருந்து இலங்கை அழைத்து செல்ல இலங்கையை சேர்ந்த படகோட்டியிடம் தலா 10 ஆயிரம் என 60 ஆயிரம்  ரூபாய் கொடுத்தாகவும் ஆனால்  கியூ பிரிவு பொலிஸாரை கண்டதும் படகோட்டி படகுடன் தப்பி சென்றார் என தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இலங்கை பணம் 8ஆயிரத்தி ஐந்நூறு இந்திய பணம் ஆயிரம் மற்றும் பாஸ்போர்ட் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கி கணக்கு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற 6 இலங்கை அகதிகள் தனுஸ்கோடியில் கைது:-இலங்கை படகோட்டி தப்பி ஓட்டம். Reviewed by Author on December 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.