அண்மைய செய்திகள்

recent
-

இந்திய அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமை செய்து கொடுக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்MP -


இலங்கையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வரும்வரை பாதுகாப்பு கருதி இங்கு வரமுடியாதவர்களுக்கு இந்திய அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமை செய்து கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த நாட்டை விட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் பல்வேறு முகாம்களில் இருக்கும் எங்களுடைய அகதிகள் பலர் இந்த நாட்டுக்கு திரும்ப இருக்கிறார்கள். இன்னும் சிலர் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இடம்பெயர்ந்து சென்றவர்களது காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. பலருக்கு குடியிருப்பதற்கான காணிகள் இல்லை.
ஏற்கனவே இங்கு குடியேற வந்தவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள், காணிகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் நாடு திரும்ப வேண்டும்.
அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே, வந்தவர்களுக்கே வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் அங்கு இருப்பவர்கள் இங்கு வந்து என்ன செய்ய முடியும் என்ற ஒரு பிரச்சினை இருக்கிறது.

இந்தநிலையில் இந்தியாவின் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.
எங்களைப் பொறுத்தவரை இலங்கையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வரும்வரை பாதுகாப்பு கருதி இங்கு வரமுடியாதவர்களுக்கு இந்திய அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமை செய்து கொடுக்க வேண்டும்.
எனவே, அரசாங்கம் அகதிகளுக்கான மீள்குடியேற்றம் தொடர்பான திட்டத்தை வகுத்துக் கொண்டு அவர்களை வரவைப்பது சிறப்பு எனக் கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமை செய்து கொடுக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்MP - Reviewed by Author on December 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.