அண்மைய செய்திகள்

recent
-

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு -


கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4 ஏ இன் கீழ் தமிழர்களை அச்சுறுத்தினார் என்பதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன், இந்த விடயம் பாரிய எதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு லண்டன் வெஸஸட்மினிஸ்டர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது.
அத் தீர்ப்பில் இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் 2400 ஸ்டேலிங் பவுண்கள் தண்டப் பணமாக அறிவித்துள்ளது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு - Reviewed by Author on December 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.