அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கடத்த இருந்த 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:-இருவர் கைது முக்கிய குற்றவாளியின் புகைப்படம் காவல்துறையினர் வெளியிட்டனர்-VIDEO,PHOTOS

இலங்கைக்கு கடத்த இருந்த 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த மாவட்ட காவல் தனிப்படை தலை மறைவான முக்கிய குற்றவாளி செல்வகுமாரை பிடிக்க    தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் திபாகர்,குகனேஸ்வரன்,நவநீதன்  ஆகியோர் ராமேஸ்வரம் நகர் காவல்துறையின்  உதவியுடன் ராமேஸ்வரம் அருகே சிவகாமி நகர் பகுதியில் துப்பாக்கி ராஜா என்பவரின் தோட்டத்தின் அருகே நேற்று இரவு (24)  மறைந்து இருந்த சிறப்பு தனிப்படை காவல்துறையினர்.

அப்போது கஞ்சாவை கடல் வழியாக கடத்த  சொகுசு காரில் கடற்கரைக்கு எடுத்த செல்ல முயன்ற போது தனிப்படையினர் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த   இருவரை பிடித்தனர்.

அவர்களை சோதனை செய்ததில்  இலங்கைக்கு கடத்துவதற்காக சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 39 பண்டல்களில் சுமார் 81 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த சிறப்பு தனிபடையினர் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயண்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும,; தனிபடையினரின் விசாரனையில் கிடைத்த முக்கிய தகவலையடுத்து ராமேஸ்வரம் கடல் வழியாக போதை பொருள்கள்,கடல்அட்டை,பிடி இலைகள் ஆகியவைகளை இலங்கைக்கு கடத்தி வரும், சர்வதேச கடத்தல் காரர்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான  ராமேஸ்வரத்ததை சேர்ந்த செல்வகுமாரை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தலைமறவாகி உள்ள செல்வகுமாரின் புகைப்படத்தை மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் வெளியிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூபாய் 65 இலட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு கட்டமாக 1 கோடி மதிப்பிலான 100 கிலோ கடத்தல் கஞ்சா காவல் கண்காணிப்பாளரின் தனிபடை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இராமநாதபுர மாவட்ட கடலோர பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கைக்கு கடத்த இருந்த 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:-இருவர் கைது முக்கிய குற்றவாளியின் புகைப்படம் காவல்துறையினர் வெளியிட்டனர்-VIDEO,PHOTOS Reviewed by Author on December 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.