அண்மைய செய்திகள்

recent
-

உங்க சருமத்தில் இப்படி வெண்படை காணப்படுகின்றதா? அதனை எப்படி போக்குவது?


வெண்படை ( விட்டிலிகோ) என்பது ஒரு வித தோல் சம்பந்தப்பட்ட வியாதி ஆகும்.
உடலில் மெலனின் உற்பத்தி செய்யும் செல்களான மெலனோசைட்டுகளின் மோசமான செயல்பாட்டின் விளைவாகவே வெண்படை ஏற்படுகிறது.
வெண்படையின் ஆரம்ப கால அறிகுற சருமத்தின் மீது ஏற்படும் வெள்ளை திட்டுக்கள் ஆகும்.

இது கைகள், பாதம், முகம், உதடு, அக்குள், இடுப்பு, வாயைச் சுற்றி, மூக்கு, கண்களைச் சுற்றி, மலக்குடல் பகுதிகள் ஆகிய பகுதிகளில் கூட ஏற்படலாம். எனப்படுகின்றது.
மேலும் இளநரை, கருத்த நிறமுடையவர்களுக்கு வாயின் உள் பகுதிக்குள்ளும் வெண்படை ஏற்படக்கூடும்.
இதனை எளிய முறையில் தடுக்க மருந்துகளை விட இயற்கை வைத்திய முறைகளே சிறந்தது ஆகும். தற்போது அதனை போக்கும் சில எளிய முறைகள் பற்றி பார்ப்போம்.


Google

  • 2 முதல் 3 துளிகள் வேம்பு எண்ணெயை காட்டனில் நனைத்து வெண்படலங்களில் மீது தேய்க்கவும். 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும். வெண்படலங்களின் மீது நிற மாற்றம் தெரியும் வரை இதனை தினமும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
  • ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை, ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட் கலவையை வெண்படை உள்ள பகுதிகளில் தடவி 30 நிமிடங்களில் கழித்து கழுவி விடவும். இது போன்று வாரத்திற்கு 3 முதல் 4 முறை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி சாற்றை, ஒரு டீஸ்பூன் சிவப்பு களிமண்ணுடன் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ளவும். அதனை, வெண்படை உள்ள இடங்களில் பற்று போட்டு 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை இதனை தொடர்ந்து செய்து வரவும்.
  • ஒரு டேபிள் ஸ்பூன் முள்ளங்கி விதையை பொடியாக செய்து கொண்டு, அதனுடன் 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இந்த கலவையை வெண்படைகளின் மீது பற்று போட்டு, 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். வாரத்திற்கு 3 முறையாவது இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
  • மாதுளை இலைகள் எடுத்து, அவற்றை வெயில் நன்கு காய வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் காலை 8 கிராம் அளவிற்கு நீரில் கலந்து குடித்து வரவும்.
உங்க சருமத்தில் இப்படி வெண்படை காணப்படுகின்றதா? அதனை எப்படி போக்குவது? Reviewed by Author on December 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.