அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவை விழுங்கும் காட்டுத்தீ... பலி எண்ணிக்கை 26


அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை 26 என அதிகரித்துள்ளது.
சிட்னி நகரம் பூமியின் வெப்பமான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் புறநகர்ப் பகுதியான பென்ரித்தில் வெப்பநிலை 48.9C ஐ எட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் இதுவரை பதிவானதில் மிக அதிகமென கூறப்படுகிறது. காட்டுத் தீயால் எழுந்துள்ள புகையால் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை ராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கங்காரு தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர்பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து தீவிபத்தால் பலி எண்ணிக்கை 26ஐ எட்டி உள்ளது.



அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் தென் கடற்கரை மற்றும் விக்டோரியாவில் உள்ள கிழக்கு கிப்ஸ்லேண்டில் உள்ள தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீ வேகமாக பரவி வருகிறது.
இங்கு வெப்ப நிலை சனிக்கிழமை பிற்பகல் 44 டிகிரி செல்சியஸ் ஐ எட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு சிட்னியின் புறநகர்ப் பகுதியான பென்ரித்தில், வெப்பநிலை 48.9 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்தது.
விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஓமியோ பிராந்தியத்தில் ஒரே இரவில் தீ விபத்து 6,000 ஹெக்டேர் அளவுக்கு தீப்பிடித்ததாக கிப்ஸ்லேண்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.



அவுஸ்திரேலியாவை விழுங்கும் காட்டுத்தீ... பலி எண்ணிக்கை 26 Reviewed by Author on January 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.