அண்மைய செய்திகள்

recent
-

முகக் கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு; இறக்குமதி செய்ய ஏற்பாடு


கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து நாட்டில் முக கவசங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

சனநடமாட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வோர், பொது போக்குவரத்தில் பயணம் செய்வோர் மற்றும் ஏற்கனவே நோய் தொற்றுக்கு உள்ளானவர்களை பாதுகாப்பின்  நிமித்தம் முக கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நாட்டில் முக கவசங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. முக கவசங்களின் பாவனை இதுவரை நாட்டில் மிககுறைந்த அளவிலேயே இருந்து வந்தது. நாடு முழுவதுமுள்ள மருந்தகங்களிலும் மிக குறைந்த எண்ணிக்கையான முககவசங்களே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

எனினும் முககவசங்களுக்கு திடீரென ஏற்பட்ட கேள்வியினால் தற்போது நாட்டில் அவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய முக கவசங்களை கோரி நேற்றும் பெரும் எண்ணிக்கையான மக்கள் மருந்தகங்களை நோக்கி படையெடுப்பதையும் முககவசங்கள் கையிருப்பில் இல்லாததனால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்புவதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது. 

அநேகமான முககவசங்கள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதிகரித்துள்ள கேள்விக்கமைய இவற்றை பங்களாதேஷிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை தனியார் மருந்துக் கம்பனிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.

முகக் கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு; இறக்குமதி செய்ய ஏற்பாடு Reviewed by Author on January 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.