அண்மைய செய்திகள்

recent
-

’இந்த கவிதை என் யோசனை'... நா.முத்துக்குமார் மகன் எழுதிய வரிகள்


"மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமார் இயற்பியல் மாணவர். ஆனால் தமிழ் மீதுள்ள காதலால் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றார். யாப்பிலக்கணத்தை முறையாக பயின்றவர் என்றாலும் அவரது கவிதைகள் பாமரனுக்கும் சரியாய் பாடம் நடத்தும் அளவிற்கு எளிமை கொண்டவை.

இயக்குநராகும் ஆசையில் திரைத்துறைக்கு வந்தவர், தன் கவிதைகளால் ரசிகர்களை மயக்குபவராக மாறிப்போனார். சுமார் 1,500 திரைப்பட பாடல்கள் மட்டுல்லாது தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

தங்க மீன்கள், சைவம் ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற கவிஞர் நா.முத்துக்குமார், மாநில விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தனது 41-வது வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கட்டிருந்த அவர் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அவரது மகன் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு எழுதிய கவிதைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



அதில் போகி என்று தலைப்பில் ஆதவன் எழுதியிருக்கும் கவிதை,

“நீ உன் ஆணவத்தை அன்பில் எரி

இதை செய்பவனுக்கு வாழ்க்கை சரி

கோயிலில் இருக்கும் தேரு

பானையை செய்யத் தேவை சேறு

வீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு

இல்லையென்றால் வீடு ஆகிவிடும் காடு

தமிழரின் பெருமை மண் வாசனை

இந்த கவிதை என் யோசனை!”



தைப் பொங்கல்

உழவர்களை அண்ணாந்து பாரு

உலகத்தில் அன்பை சேரு

அவர்களால் தான் நமக்கு கிடைக்கிறது சோறு

அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்கு பெரும் பாடு

உழவர்கள் நமது சொந்தம்

இதை சொன்னது தமிழர் பந்தம்

பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்

இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்!



மாட்டு பொங்கல்

வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு

நீ உன் வேட்டியைத் தூக்கிக்கட்டு

கரும்பை இரண்டாக வெட்டு

நீ உன் துணிச்சலுக்கு கை தட்டு

சிப்பிக்குள் இருக்கும் முத்து

மாடு தமிழர்களின் சொத்து

மாடு எங்கள் சாமி

நீ உன் அன்பை இங்கு காமி!



காணும் பொங்கல்

உறவினர்கள் வந்தார்களா என்று பாரு

உலகத்தில் நல்ல நண்பர்களை சேரு

நீ அழகாகக் கோலம் போடு

உன் நல்ல உள்ளத்தோடு

நீ உனக்குள் கடவுளைத் தேடு

இல்லையென்றால் நீ படுவாய் பாடு

பெண்ணைக் கண்ணாகப் பாரு

இல்லையென்றால் கிடைக்காது சோறு!

இவ்வாறு முடிகிறது கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் எழுதிய கவிதை."இந்த கவிதை என் யோசனை'... வைரலாகும் நா.முத்துக்குமார் மகனின் வரிகள்""மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.நா.முத்துக்குமார் மகன் எழுதிய கவிதை, நா.முத்துக்குமார் மகன் ஆதவன்"
’இந்த கவிதை என் யோசனை'... நா.முத்துக்குமார் மகன் எழுதிய வரிகள் Reviewed by Author on January 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.