அண்மைய செய்திகள்

recent
-

கலாச்சார சீர்கேடுகள் நடப்பதாக அடையாளம் காணப்பட்ட பற்றைக்காடுகள் மன்னார் நகர சபையால் துப்பரவு


மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட பெரியகமம் பகுதியில்  உள்ள பற்றைக்காடுகளில் கலாச்சார சீர்கேடுகள் நடைபெறுவதாக  அப்பகுதி பொது மக்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் அவர்களிடம் முறைப்பாடு ஒன்றை தெரிவித்திருந்தார்கள்.

குறித்த விடயம் தொடர்பாக நகர சபை உறுப்பினரால் நகர சபை தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து
உடனடியாக 10/01/2020 அவ் பற்றைகாடுகள் முழுவதும் கனரக இயந்திரம் கொண்டு முழுவதுமாக   துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மன்னார் நகர சபை உறுப்பினர் ஜோசப் தர்மன் கருத்து தெரிவிக்கையில் 

இன்றைய தினம் மன்னார் நகர சபைக்கு செந்தமான  மைதானப்பகுதிகள் அனைத்தும் துப்பரவு செய்யப்படுவதுடன் தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு பதினான்கு நாட்களுக்குள்  காணிகளில் உள்ள பற்றைகள் காடுகள் துப்பரவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு துப்பரவு செய்யப்படவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ள இந்த மைதானம் பெரியகமம்  இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது  இவை பராமரிக்காமல்  இருப்பதால்  இந்த மைதானத்தை மன்னார் நகர சபைக்கு  சொந்தமாக்கி   தென்னை வாழை போன்ற பயிர்கள் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

 அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதற்கான முக்கிய காரணம்  இடம் பெயர்வுகள் இடம் பெற்ற காலங்களில் காணிகளையும் வீடுகளையும் இலவசமாக பெற்றவர்கள்  பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த இடங்களுக்கு சென்று அங்கும் வீட்டுத்திட்டங்களைப் பெற்று குடியேறிவிட்டதும் இப்பகுதியில் உள்ள வீடுகள் காணிகள் பராமரிப்பில்லாமல் பற்றைக்காடுகள் வளர்ந்து கலாச்சார சீர்கேடுகள் நடக்கும் இடமாக மாறியுள்ளது.

 ஆனால் மன்னாரை சொந்த இடமாக கொண்ட எத்தனையோ குடும்பங்களுக்கு இருப்பதற்கு வீடு காணிகள் இல்லை இதற்கான மாற்று நடவடிக்கைகளை மன்னார் நகர சபையால் எடுப்பதற்கு  தீர்மானித்தள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







கலாச்சார சீர்கேடுகள் நடப்பதாக அடையாளம் காணப்பட்ட பற்றைக்காடுகள் மன்னார் நகர சபையால் துப்பரவு Reviewed by Author on January 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.