அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முறைப்பாடு.


நீதிமன்றத்தில் அழைப்பாணையைப் பெறாமல் சட்டரீதியற்ற முறையில் பிடியாணையைப் பெற்று தன்னை கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்ததாக ஜனாதிபதி சட்டதரணி K.V தவராசா செய்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மனித உரிமை ஆணைக்குழுவிற்கு வழங்கிய முறைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-



ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வேன் கடத்தல் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் தயாராகியிருந்தனர்.

இந்நிலையில், தான் தனது சட்டத்தரணிமூலம் முன்பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் மனுவை ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டிருக்கையில், பிணை வழங்கக்கூடிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கையில், நீதிமன்றத்தில் அழைப்பாணையைப் பெறாமல் சட்டரீதியற்ற முறையில் பிடியானையைப் பெற்று தன்னை கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தார்

அத்துடன்  திகதி December மாதம் 2019ம் ஆண்டு 30ம் திகதி கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த மனுவை மீளாய்வு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு திகதி குறிப்பிப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்வதற்கான நோக்கத்தில் 1ம் 2ம் சந்தேகநபர்களின் ஊடாக பொய்யான குற்றச்சாட்டொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்து தனக்கு வழங்கியுள்ள பிணையை ரத்துச் செய்து தன்னை மீளவும் கைது செய்து சிறையிலடைப்பதற்கு முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.



மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முறைப்பாடு. Reviewed by Author on January 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.