அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வு-பாதீப்படையும் கிராம மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வு இடம் பெறுகின்ற போதும் உரிய அதிகாரிகள் இது வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பாதீக்கப்பட்ட கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் உள்ள அருவியாறு , கூராய் , பாலியாறு போன்ற பகுதிகளிலும் அளவு கணக்கில்லாதவாறு டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்களில் மண் ஏற்றப்படுவதுடன்  நானாட்டான் அருவியாற்றங்கரையில் மீன் வளர்ப்பிற்கு அனுமதி எடுத்து மணல் வியாபாரங்கள் நடை பெறுவதாக  மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

அத்துடன் பெக்கோ இயந்திரங்கள் மூலம்  நீர் ஊற்று வெளி வரும்  வரையில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது.

இதனை கண்டு கொள்ளளாத நிலையில் பொலிசார் உள்ளனர்  என மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடையம் தொடர்பாக   மக்கள் மேலும் தெரிவிக்கையில்,,,

கனரக வாகனங்களின் அளவுக்கு அதிகமான போக்கு வரத்துகளால்  வீதிகள் சேதமடைந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது.

 ஓடைகளை குடைந்து அகழிகளாக தோண்டிச் செல்வதால் சாதாரண வெள்ளம் வந்தாலும் குடி மனைகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த வருடம்  மன்னார் மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள்  வந்து பார்வையிட்டு மண் அகழ்விற்கு தடை செய்யப்பட்ட பகுதி என தெரிவிக்கப்பட்டது.

-எனினும் மீண்டும் அவ்விடத்தில் மணல் அகழ்வு நடை பெற்து வருகின்றது.

  இதனை அதிகாரிகளும் பொலிசாரும் கேட்பதில்லை.  பொதுமக்கள் யாரேனும் இது பற்றி கதைக்க ஆரம்பித்தால் அவர்களுக்கு சமூர்த்தி நிறுத்தப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சரின் கையாற்கள் இப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடு படுகிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தனி மனிதர்களின் இலாபம் கருதி எமது இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை  இலங்கை கனிய வளம் , சுற்றாடல் அதிகார சபை ,  பொலிசார்  ,  மற்றும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று  தெரிவித்த   அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக இயற்கை வளச்சுரண்ட்களை மேற்கொள்ளும்  மணல் மாபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது யார்???  என்று   மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வு-பாதீப்படையும் கிராம மக்கள் விசனம் Reviewed by Author on January 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.