அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு - மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்!


உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் எனவும், ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் போர் பதற்றம் வலுப்பெற்றுள்ளது.
 
ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இருநாட்டு படையினரும் பரஸ்பர தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க படைவீரர்கள் 80 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்பு இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கர்வாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. ஈரான் தனது ஆணு ஆயுத கனவை கைவிட வேண்டும்.
நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை ஈரான் அணு அயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன்.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும்.
உள்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது. ஈரானுக்கு எதிராக இராணுவத்தை, ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு - மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்! Reviewed by Author on January 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.