அண்மைய செய்திகள்

recent
-

குஜராத்தில் 12,000 ஹெக்டேர் பயிர்களை சூறையாடிய பாலைவன வெட்டுக்கிளிகள்!

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
கடந்த டிசம்பர் மாதம் வடக்கு குஜராத்தில் விளைநிலங்கள்மீது வரலாறு காணாத தாக்குதல் நடந்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. ‘இத்தகையப் பேரழிவை இதுவரை நாங்கள் சந்தித்ததில்லை’ என்கிறார்கள் அந்தப் பகுதி விவசாயிகள்.

பருவநிலையில் ஏற்படும் சிறு மாறுதல்கூடப் பேரழிவை ஏற்படுத்தி, விவசாயிகளை மீண்டெழ முடியாத அளவுக்கு அடித்து வீழ்த்திவிடும் என்பதற்கு குஜராத்தில் நடந்த ஒரு சம்பவம் சிறந்த உதாரணம்.

இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் காரணமாக குஜராத்தில் பருமழைக்காலம் சில நாள்கள் நீடித்தன. காற்றின் திசை கொஞ்சம் மாறியது. அவ்வளவுதான். ஆனால் விளைவு, பேரழிவு. சுமார் 12,000 ஹெக்டேர் பரப்பளவிலிருந்த பல வகைப் பயிர்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன.

கடந்த டிசம்பர் மாதம் வடக்கு குஜராத்தில் விளைநிலங்கள்மீது வரலாறு காணாத தாக்குதல் நடந்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. ‘இத்தகையப் பேரழிவை இதுவரை நாங்கள் சந்தித்ததில்லை’ என்கிறார்கள் அந்தப் பகுதி விவசாயிகள். அந்த அழிவை ஏற்படுத்தியது பாலைவன வெட்டுக்கிளிகள் (Desert Locusts).

சூடான் நாட்டில், செங்கடல் பகுதியில் லட்சக்கணக்கில் உருவான இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் காற்றின் திசை, அதன் வேகத்தைப் பயன்படுத்தி சவுதி அரேபியப் பாலைவனம் வழியாக, பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. மழைக்காலம் நீடித்து, காற்றின் திசை மாறியதால் இந்தப் படை குஜராத்தில் தரை இறங்கியது.

குஜராத்தில் 12,000 ஹெக்டேர் பயிர்களை சூறையாடிய பாலைவன வெட்டுக்கிளிகள்!
இந்த அந்நியப் படையெடுப்பால் வடக்கு குஜராத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருக்கும் 20 தாலுகாக்களிலுள்ள 100 கிராமங்கள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தவிர பதான், கட்ச், சபர்கந்தா, மெஹ்சனா மற்றும் பனாசங்க்தா மாவட்டங்களில் செழித்து வளர்ந்திருந்த ஆமணக்கு, சீரகம், பருத்தி, கடுகு, உருளைக்கிழங்கு என அனைத்துப் பயிர்களையும் இந்தப் பூச்சிக்கூட்டம் தாக்கி அழித்துவிட்து. மாட்டுத் தீவனப் பயிர்களைக்கூட இவை விட்டுவைக்கவில்லை. மோசமாக பாதிக்கப்பட்டது, பனாசங்க்தா மாவட்டம்தான். அங்கு மட்டும் 5,000 ஹெக்டேர் பரப்பளவிலிருந்த பயிர்கள் அழிந்துவிட்டன.

பாலைவன வெட்டுக்கிளிகள் மிகவும் அபாயகரமானவை. ஒரு வெட்டுக்கிளிக் கூட்டம் ஒரு நாளைக்குச் சுமார் 10 யானை, 25 ஒட்டகம் அல்லது 2,500 மனிதர்கள் உண்பதற்குச் சமமான உணவை விழுங்கும். இலை, பூ, காய், பழம், விதை, பட்டைகள், வளரும் இளம் பயிர்கள் என அனைத்தும் உண்ணப்பட்டதால், விவசாயப் பண்ணைகள் குறுகியகாலத்தில் அழிந்துவிட்டன.

- இந்தப் பூச்சிகளின் படையெடுப்பு, விளைவு மட்டுமின்றி, அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை முழுமையாக விவரிக்கும் பசுமை விகடன் சிறப்புச் செய்திக் கட்டுரையை வாசிக்க &gt; https://www.vikatan.com/news/agriculture/the-impact-of-desert-locusts-on-gujarat

நெற்பயிரைத் தாக்கும் நோய்களும் பாதுகாப்பு நுட்பங்களும்!

உலக அளவில் முக்கியமான உணவுப் பொருள் நெல். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அத்தியாவசியமான உணவுப் பொருள். ஆனால், அதை உற்பத்தி செய்வதற்குள் விவசாயிகள் படும் சிரமம் சொல்லி மாளாது. பூச்சி, நோய்த்தாக்குதலிலிருந்து பயிரைக் காப்பாற்ற பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றிலுள்ள நஞ்சு நெல்லில் படிந்து, அரிசி மூலமாக மனித உடலுக்கும் சென்றுவிடுகிறது.

குஜராத்தில் 12,000 ஹெக்டேர் பயிர்களை சூறையாடிய பாலைவன வெட்டுக்கிளிகள்!
தற்போது, உணவுப் பொருள்களில் நஞ்சுகளைத் தவிர்க்க இயற்கைவழி வேளாண்மையைப் பல விவசாயிகள் முன்னெடுத்து வருகிறார்கள். எனவே, நெற்பயிரைத் தாக்கும் நோய்களைப் பற்றி விவசாயிகள் முழுமையாகத் தெரிந்துகொண்டால், இயற்கைவழி வேளாண்மை மூலமே பயிர்களைக் காப்பாற்றி, நல்ல மகசூல் பெறலாம்’’ என்கிறார் கிருஷ்ணகிரியிலுள்ள அதியமான் வேளாண் கல்லூரியின் பயிர் நோயியல்துறை துணைப் பேராசிரியர் செந்தில்குமார்.

குஜராத்தில் 12,000 ஹெக்டேர் பயிர்களை சூறையாடிய பாலைவன வெட்டுக்கிளிகள்! Reviewed by Author on February 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.