அண்மைய செய்திகள்

recent
-

15வயதில் கேன்சர்: 18வயதில் சதம்! இளம் கிரிக்கெட் வீரர் சாதனை -


புற்று நோயால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் வீரர் கமல் சிங், ரஞ்சிக் கோப்பைத் தொடரில் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
உத்தரகாண்ட மாநிலத்தை சேர்ந்த கமல் கன்யால்சிங், இன்று இளம் கிரிக்கெட் வீரராக வலம் வந்த கொண்டிருக்கிறார். இவருக்கு 15வயது இருக்கும் போது லுக்கீமியா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பின் டெல்லி, நெய்டாவில் உள்ள மருத்துவமனையில் 6 மாதங்கள் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். அதிலிருந்து மீண்டு, அவர் சிறுவயதிலேயே ஆர்வம் கொண்ட கிரிக்கெட் போட்டிக்கு தயாராகியுள்ளார்.
லோதா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட பின்னர், உத்தரகாண்ட் கிரிக்கெட் சங்கத்தை பிசிசிஐ முழுநேர உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில், ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், தற்போது முதல் போட்டியிலேயே சதமடித்து திறமையை நிரூப்திருக்கிறார் கமல் சிங்.

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், சிறப்பான செயல்பாடு காரணமாக ரஞ்சிக் கோப்பை அணிக்கு அவர் தேர்வாகியிருக்கிறார். ஒரு இரட்டைச் சதம் இரண்டு சதங்கள், மூன்று அரை சதங்கள் உள்பட 9 போட்டிகளில் அவர் அடித்த ஓட்டங்கள் 800.
மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், கமல் சிங் உதவியுடன் உத்தரகாண்ட் அணி, முதல் இன்னிங்ஸில் 44 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸில் மகாராஷ்டிரா 207 ஓட்டங்கள் எடுத்த நிலையில், உத்தரகாண்ட் அணி, 251 ஓட்டங்கள் சேர்த்தது. கமல் சிங், 160 பந்துகளில் 17 பவுண்டரிகள் உதவியுடன் 101 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த சாதனைக்கு பின் பேசிய கமல் சிங் ``எனக்கு 15 வயதாக இருக்கும் போது, லுக்கீமியாவால் பாதிக்கப்பட்டேன். மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக தந்தையுடன் சென்றிருந்தபோது, அது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் மருத்துவர்கள், தந்தையிடம் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. அடிக்கடி எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. லுக்கீமியா உறுதி செய்யப்பட்ட பின்னர், ஓராண்டுக்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை.
எல்லா சூழல்களிலும் எனது குடும்பத்தினர், எனக்கு ஆதரவாக நின்றனர். என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தனர். என்னைப் புலி என்றே வீட்டில் இருப்பவர்கள் அழைத்தார்கள். அதோடு, இதிலிருந்து என்னால் நிச்சயம் மீண்டு விட முடியும் என நம்பிக்கையூட்டினார்கள். 6 மாத சிகிச்சைக்குப் பின்னர், மேலும் 6 மாதங்கள் ஓய்வு எடுத்து, நோய் தாக்கத்திலிருந்து முழுமையாக மீண்டேன். அதன் பின்னர் முதலில் நான் செய்த வேலை, கிரிக்கெட் மைதானத்துக்குத் திரும்பியதே'' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

15வயதில் கேன்சர்: 18வயதில் சதம்! இளம் கிரிக்கெட் வீரர் சாதனை - Reviewed by Author on February 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.