அண்மைய செய்திகள்

recent
-

சீனா சென்று வருபவர்கள், அமெரிக்காவுக்கு நுழையத் தடை.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் விஸ்வரூபம் எடுத்து வருவதால், சைனாவுக்கு சென்று வந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வுஹான் நகரில் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் கடந்த மாதம் தோன்றி தாக்கத்தொடங்கியது. இந்த வைரஸ் தாக்கம், சைனாவின் பிற மாகாணங்களுக்கும் மின்னல் வேகத்தில் பரவியது.

அது மட்டுமின்றி, 23 உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் நோய் பரவி, தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.

உலக நாடுகளைப் பொறுத்தமட்டில் ஜப்பானில் 12, தாய்லாந்தில் 14, சிங்கப்பூரில் 13, ஆஸ்திரேலியா 9, தைவான் 9, மலேசியா 8, தென்கொரியா 7, பிரான்ஸ் 6, அமெரிக்கா 6, ஜெர்மனி 5, வியட்நாம் 5, ஐக்கிய அரபு அமீரகம் 4, கனடா 3, இத்தாலி 2, ரஷ்யா 2, UK 2, கம்போடியா 1, பின்லாந்து 1, இந்தியா 1, நேபாளம் 1, பிலிப்பைன்ஸ் 1, இலங்கை 1 என இந்த நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை பதற வைக்கிறது.

இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம், உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.

சைனாவில் இன்றைய நிலவரப்படி இந்த வைரஸ் நோய் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 295 பேர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். இதில் 1 பிலிப்பைன்ஸ் நாட்டவரும் உள்ளடங்கும்

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவையும் பதற வைத்துள்ளது. சைனாவுக்கு கடந்த 2 வாரங்களில் சென்று வந்த வேறு நாட்டவர் அமெரிக்காவில் நுழைய அதிரடியாக தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் அறிவித்துள்ளார்.

மேலும், சைனாவின் ஹூபெய் மாகாணத்துக்கு போய் விட்டு அமெரிக்கா திரும்புகிற அமெரிக்கர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். சைனாவின் பிற பகுதிகளுக்கு சென்று விட்டு வருகிற அமெரிக்கர்கள் 2 வாரம் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், உலக சுகாதார அமைப்பின் முடிவை அடுத்து அமெரிக்காவிலும் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அமெரிக்காவைப்போல் அவஸ்திரேலியாவும் இதே அதிரடியில் இறங்கியுள்ளது. சைனா சென்று வருகிற வேறு நாட்டவர் அவஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டவர் சைனா போய் வந்தால், அவர்கள் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என அவிஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரீசன் அறிவித்துள்ளார்.
கெளதமாலா நாடும் இதேபோன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

சீனா சென்று வருபவர்கள், அமெரிக்காவுக்கு நுழையத் தடை. Reviewed by Author on February 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.