அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கும் குழுவை வழி நடத்தும் தமிழ் விஞ்ஞானி -


அவுஸ்திரேலிய நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் குழுவை இந்திய வம்சாவளி தமிழர் வழி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த குழுவானது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தங்களின் முதல் ஆய்வில் வெற்றி பெற்று உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 720 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 34,394 பேர் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 4,826 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் எகிறும் கொரோனா வைரஸ் பலியால் கலக்கமடைந்துள்ள பல நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
அதில் அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான குழு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க அவுஸ்திரேலியாவின் முன்னணி அறிவியல் நிறுவனமான CSIRO ஆய்வகத்தில் வைரஸின் முதல் தொகுப்பை உருவாக்கியுள்ளது.

மட்டுமின்றி இந்த குழுவானது கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் நிலையை நெருங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரோனா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் மெல்போர்னின் டோஹெர்டி இன்ஸ்டியூட் கடந்த வாரம் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான CSIRO புதிய கொரானா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.
வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிவதற்கு அதை தனியே பிரித்தெடுப்பது, ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பது ஆகிய இரண்டும் முக்கியமான நிலைகள் ஆகும்.
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கு இது முக்கியம் என்ற நிலையில், விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.
பிட்ஸ் பிலானி மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் உயர்கல்வி பயின்ற எஸ்.எஸ்.வாசன், டெங்கு, சிக்கன் குனியா மற்றும் ஜிகா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கும் குழுவை வழி நடத்தும் தமிழ் விஞ்ஞானி - Reviewed by Author on February 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.