அண்மைய செய்திகள்

recent
-

எப்படி கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது ? -


பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பாகும்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், போதுமான சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் எந்த உணவுகள் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்வது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
  • நீங்கள் உண்ணும் உணவில் போதுமான இரும்பு, உயிர்ச்சத்து பி 12 மற்றும் சி சத்துக்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
  • பச்சைக் காய் மற்றும் கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெந்தயக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உலர்ந்த பழங்கள், கம்பு, கேழ்வரகு போன்ற தானிய வகைகள் என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதிக இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், குறிப்பாகக் கொய்யா, பேரீச்சம் பழம், அத்திப் பழம் போன்றவற்றைத் தினமும் உட்கொள்ள வேண்டும்.
  • உயிர்ச்சத்து சி இரும்புச் சத்தை உடலில் தக்க வைக்க உதவும். அதனால் கமலாப் பழம், எலுமிச்சை பழம், நாவல் பழம் போன்ற பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிராக்கோலி, தக்காளி, மிளகு போன்ற பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உயிர்ச்சத்து பி சத்து நிறைந்த வெண்டைக்காய், முளைக்கட்டிய பயிர்கள், பூசணிக்காய் போன்ற காய்களை அதிகம் உண்ண வேண்டும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில், முடிந்த வரை தேநீர், காபி, மது, கோதுமை உணவுப் பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அதிகமான வகையில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
  • நாட்டுக் கோழி முட்டை, பருப்பு வகைகள், ஆட்டு இறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றிலும் இரும்புச் சத்து நிரம்பி உள்ளது.
  • முடிந்த வரை குதிரைவாலி, சாமை, திணை, கை குத்தல் அரிசி போன்ற அரிசி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

எப்படி கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்துக் கொள்வது ? - Reviewed by Author on February 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.