அண்மைய செய்திகள்

recent
-

ஈஸ்டர் நாட்களில் கொரோனா வைரஸ் உச்சம் பெறக்கூடும்: பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு! -


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலானது ஈஸ்டர் நாட்களில் உச்சம் பெறக்கூடும் என நாட்டின் முன்னணி நுண்ணுயிரியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பிரித்தானியாவின் உள்ப்பகுதிகளில் பரவி வருவதால்,
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஒரு பெரிய அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது, முன்னணி நுண்ணுயிரியலாளரான Peter Piot இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகக் காணப்படுவதால், அச்சுறுத்தல் மிகைப்படுத்தப்படவில்லை என்றும் பிரித்தானியாவில் ஏற்கனவே சில ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஈஸ்டர் நாட்களில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உச்சம் பெறும் எனவும் அவர் தமது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி கொரோனா தாக்கம் உச்சம் பெற்ற பின்னர், அதன் அடுத்த 6 மாதங்கள் அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பல மில்லியன் பிரித்தானியர்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் என Peter Piot அச்சம் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என குறிப்பிட்ட அவர், நவம்பர் மாதம் அதன் தாக்குதல் மீண்டும் உருவாகும் என்றார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை அதன் தாக்கம் தொடர்பில் எதுவும் உறுதி செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடையே பிரித்தானியா முழுவதும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது,

இந்த எண்ணிக்கை 51 ல் இருந்து 116 என உயர்ந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர், இது ஒரு உலகளாவிய தொற்றுநோய் மட்டுமின்றி பிரித்தானியாவில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் நாட்களில் கொரோனா வைரஸ் உச்சம் பெறக்கூடும்: பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு! - Reviewed by Author on March 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.