அண்மைய செய்திகள்

recent
-

இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.... கிருமி தொற்றிற்கு ஆயுர்வேத,சித்த மருத்துவம் -


நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல உலக நாடுகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும், வயதானவர்களும் தான்.
இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தாலே போதும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.
வைரஸ் பரவி வரும் இந்தசமயத்தில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தின் ஊடாக எப்படி நோய்எதிரப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம் என இங்கு பார்ப்போம்.
ஆயுர்வேதம்
  • ஒரு லிட்டர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடி, 4 ஸ்பூன் மல்லி விதைகள் மற்றும் சிறிது நற்பதமான துளசி இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்நீரை நாள் முழுவதும் குடிக்கவும்.
  • ஒரு டம்ளர் பாலில் 4 டம்ளர் நீர் மற்றும் 3 பூண்டு பற்களை சேர்த்து, ஒரு டம்ளராக சுண்டும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, டீ அல்லது காபிக்கு பதிலாக குடிக்க வேண்டும்.
  • 500 மிலி மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் பெருங்காயத் தூள், 1 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முதல் மூன்று முறை குடிக்கலாம்.
  • வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் குளியலை முக்கியம். இதற்கு 100 கிராம் வெந்தயத்தை 1 லிட்டர் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்த எண்ணெய் நன்கு குளிர்ந்த பின், உடல் மற்றும் தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து, ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.
  • 10-15 துளசி இலைகள், 4-5 பாரிஜாதம், 4-5 வேப்பிலை, 6 வெற்றிலை மற்றும் மஞ்சள் கிழங்கு. இவை அனைத்தையும் தட்டி 250 மிலி நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாக சுண்ட வைத்து, அத்துடன் வெல்லம் மற்றும் சீரகப் பொடி சேர்த்து இந்த பானத்தை காலை உணவு அல்லது மதிய உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை என ஒரு வாரம் மட்டும் குடிக்கவும். இதனை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது.
சித்த மருத்துவம்
  • ஒரு லிட்டர் நீரில் 4-5 மிளகு மற்றும் பெரிய வெற்றிலையை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, நாள் முழுவதும் குடிக்க வேண்டும். அல்லது குடிக்கும் மோரில் 10 கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து கலந்து குடிக்க வேண்டும்.
  • இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் சின்ன வெங்காயம் இவை நான்கும் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பொருட்கள். இவற்றை உங்களின் அன்றாட சமையலில் தவறாமல் சேர்த்து வந்தாலே, நோயெதிர்ப்பு சக்தியை வலிமையுடன் வைத்துக் கொள்ளலாம்.
  • அரை அடி அமிழ்தவள்ளி இலைகளை 2 டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக வரும் வரை சுண்ட வைக்க வேண்டும். பின் அதை குளிர வைத்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடிப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என நேச்சுரோபதி மருத்துவர் கூறுகிறார்.
  • கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில், எலுமிச்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் தினமும் குடித்து வருவது நல்லது.

இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.... கிருமி தொற்றிற்கு ஆயுர்வேத,சித்த மருத்துவம் - Reviewed by Author on March 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.