அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் -

அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதியில் இனம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுள்ள மூவரால் அச்சமூகத்தில் கொரோனா தொற்று பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இதுவரையில் மொத்தம் 59 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உறுதி செய்யப்படுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவுக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் தென் கொரியாவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
தென்கொரிய நாட்டின் இராணுவத்தினர் கொரோனா வைரஸ் வெகுவாக பரவியுள்ள தென்கிழக்கு நகரமான டேகுவின் பெரும் பகுதிகளை கிருமி நீக்கம் செய்து வருகின்றனர்.
நேற்று வரை தென் கொரியாவில் கோவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,150 ஆக பதிவாகியுள்ளதுடன் 17 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன், தனது அதிகாரிகள் நாட்டில் கொரோனா பரவுவதை தடுக்க தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அதிகாரிகள், நாள்பட்ட கொரோனா அறிகுறிகளை கொண்ட ஒரு பெண்மணிக்கு கோவிட் - 19 இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அவர் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு பயணம் செய்ததாகவோ அல்லது நோயினால் பாதிக்கபட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்ததாகவோ தெரியவில்லை என்று மருத்துவ அதிகாரிகள் இது தொடர்பில் கூறியுள்ளனர்.
இது சமூகத்திற்குள் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்கள் இன்னமும் உள்ளதை காண்பிப்பதாக அமெரிக்கவைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் இதுவரையில் 50 இற்க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
உலகளவில் இதுவரையில் 83,650 ற்க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அதில் சீனாவில் மாத்திரம் 78,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,791 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானில் இன்று வரையில் 593 தொற்றுநோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் 43 பேர் பலியாகியுள்ளதாகவும் ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது.

கட்டார் நாட்டிலும் ஒரு கொரோனா நோயாளர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு நடைபெற இருந்த கால்பந்தாட்ட தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலக சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை சரிவடையச் செய்துள்ளதாகவும் குறிப்பாக லண்டனின் FTSE இல் கிட்டத்தட்ட 13% மதிப்பைக் குறைத்துள்ளதாகவும் உலக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் - Reviewed by Author on March 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.