அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி-மன்னார் தமிழ்ஸ் உதை பந்தாட்ட கழகம் வெற்றி-VIDEO,PHOTOS

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 16 ஆம் நாள் போட்டிகள்   நேற்று   வெள்ளிக்கிழமை  (06)  இரவு 7.45 மணியளவில் மின் ஒளியில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

'மன்னார் பிரிமீயர் லீக்' தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில்  குறித்த போட்டி இடம் பெற்றது.

குறித்த உதை பந்தாட்ட போட்டியானது மன்னார் தமிழ்ஸ் உதை பந்தாட்ட கழகத்திற்கும்   பிரதர் ஸ்ரனி ஐக்கிய  உதைபந்தாட்ட கழகத்திற்கு இடையில் இடம் பெற்று வருகின்றது.

-இதன் போது பிரதர் ஸ்ரனி ஐக்கிய  உதைபந்தாட்ட கழக வீரர் ஜே.ஜோண்சன் 36 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.

அதனைத் தொடர்ந்து மன்னார் தமிழ்ஸ் உதை பந்தாட்ட கழக வீரர்களான ஜே.விதுசன் 42,58,72 ஆவது நிமிடங்களில் 3 கோல்களையும்,ஐ.இமல்டன் 68 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும்,எஸ்.சஜீபன் 90 ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்தனர்.

-இதன் போது மன்னார் தமிழ்ஸ் உதை பந்தாட்ட கழகம் 5:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.





மன்னார் பிரிமீயர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி-மன்னார் தமிழ்ஸ் உதை பந்தாட்ட கழகம் வெற்றி-VIDEO,PHOTOS Reviewed by Author on March 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.