அண்மைய செய்திகள்

recent
-

மகளிர் தினம்-யுத்தப்பாதிப்பில் இருந்து மீள முடியாத ஈழத்துப் பெண்கள்-படங்கள்

உலகளாவிய ரீதியில் பெண்கள் முன்னேற்றம் ஆளுமை அதிகாரம் அபிவிருத்தி  என்பவற்றின் வெளிப்படுதன்மையை வெளிக்காட்டுவதற்கு என அனைத்து நாடுகளிலும் மார்ச் மாதம் 08 திகதி சர்வதேச மகளீர் தினமாக பிரகடனப்படுத்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.

சர்வதேச ரீதியில் பெண்களின் நிலை முன்னேற்றபாதையில் சென்று கொண்டிருந்தாலும் ஈழத்துப் பெண்களின் நிலை யுத்தம் நிறைவுற்று சகாப்தம் ஒன்று கடந்தாலும் சாதாரண நிலையிலையே காணப்படுகின்றது குடும்பத்திற்கு ஒரு பெண் போராளிகளை போராட்டத்திற்கு  அர்பணித்த எம் சமூகம் யுத்ததின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கின்றது

இலங்கையில் இடம் பெற்ற 30 வருட உள்நாட்டு போர் நேரடியாக பல்வேறுபட்ட பொருளாதார அரசியல் சமய சமூக பிரச்சினைகளை தோற்றுவித்தது.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குறித்தப்பிரச்சினைகள் தீர்கப்பட்டதா என்றால் எம்மிடம் பதில் இல்லை அந்தளவு யுத்ததின் விபரீத விளைவுகளை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றது என்பதே நிதர்சனம்

யுத்ததின் அதியுச்ச பாதிப்பை தன்னகத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்ததின் பின்னர் பரிய அளவு இல்லாவிட்டாலும் ஒரு அளவிற்கு யுத்ததின் வடுக்களை குறைப்பதற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் இடம் பெற்றாலும்

வடக்கு கிழக்கு பகுதியில் யுத்ததினால் பாதிகப்பட்ட மக்களின் உடல் உள சமூக பொருளாதார  ரீதியான  பாதிப்புக்கள் இதுவரை சரி செய்யப்பட முடியாததாகவே காணப்படுகின்றது.

நேரடியாக யுத்தமும் யுத்ததின் பின்னர் உருவாக்கப்பட்ட சூழ்நிலையும் ஈழத்து பெண்கள் மத்தியில் பாரிய அளவிலான உடல் உளநல பாதிப்புக்கு வித்திட்டது என்பது உண்மையாகும்

யுத்ததிற்கு பின்னர் வடக்கு கிழக்கு பகுதியில் அதிகளவான பெண்கள் விதவை ஆக்கப்பட்டனர் அனேக பெண்கள்  குடும்பத்தில் ஆண்தலைமைத்துவம் அற்ற நிலையில் குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குடும்ப சுமை காரணமாக பல பிந்தங்கிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உயிரை பனயம் வைக்கும் ஆபத்தான ஆழ்கடல் மீன்பிடி அட்டை நண்டு பாசி வளர்பு போன்ற தொழிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

 பெரும்பாலான பெண்கள் நேரடியா காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் யுத்ததின் இறுதியில் இரானுவத்திடம் ஒப்படைத்த தங்கள் பிள்ளைகளை,கணவனை,சகோதரணை தேடி தேடி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னேடுத்து மனநல ரீதியில் பாதிக்கப்பட்டு தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பதை அறிய முடியாத அனாதைகள் ஆக்கப்பட்டனர்.

இன்னொரு புரம் யுத்த காலப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகள் என்ற பெயருடன் ஆயுள் கைதிகளாக 10 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் விசாரணைகள் கூட நடத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எத்தனையோ தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி நீதி மன்றத்திலும் பொலிஸ்நிலையங்களிலும் ஆணைக்குழுக்களுக்கும் அலைந்து திரியும் அம்மாமார்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல யாரும் இல்லாத நிலை

இது ஒரு புறம் இருக்க யுத்த பாதிப்பில் இருந்து தங்கள் குடும்பங்களை மீள் உறுவாக்கம் செய்ய வேண்டும் என அனேக பெண்தலைமைதுவ குடும்ப பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் நேரடியாக கடனாலியாகி உள்ளனர்.

 குழுக்களாகவும் தனி நபர்களாகவும் பெற்ற கடன்களை செலுத்தும் அளவிற்கு குடும்ப வருமான போதாமையினால் இதுவரை நாடளாவிய ரீதியில் 124 க்கு மேற்பட்ட பெண்கள் உளநல ரீதியில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளனர்.

தொடர்சியாக இவ்வாறான நுண்நிதி நிறுவனங்களின் ஆக்கிரமிம்பில் யுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்களும் அகப்பட்டு கடனை மீள் செலுத்த முடியாத நிலையில் நுண்நிதி நிறுவன ஊழியர்களின் அவமானப்படுத்தும் பேச்சுக்கள் காரணமாகவும் பாலியல் ரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாகவும் அதிகளவான குடும்ப சுமை காரணமாக ஏற்படுகின்ற மனநல பாதிப்பின் உச்சதில் இறுதியாக தற்கொலை எனும் ஆயுதத்தை கையில் எடுக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அவர்களை நம்பியுள்ள குடும்பத்தின் வாழ்கை கேள்வி குறியாகின்றது.

இவ்வாறான நேரடி மறை முக பாதிப்புக்களை வடக்கு கிழக்கு பெண்கள் அனுபவித்து வருகின்ற நிலையில் அராசாங்கம் தீர்கமான ஒரு அரசியல் சமூக பொருளாதர சாசன திருத்ததை மேற்கொள்கின்ற போது இவர்களுக்கான விசேட அவதானிப்புக்களை உள்ளடக்குவது பொருத்தமாக காணப்படும் என்பது உண்மையாகும்.

குறிப்பாக பெண்தலைமைதுவ குடும்பங்களுக்கு என விசேட தொழில் பயிற்சிகள் வாழ்வாதர உதவிகள் அரசகடனுதவிகள் என்பன வழங்கப்படும் போது பெண்தலைமைத்துவ குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவதுடன் நுண்நிதி நிறுவனக்களின் கடன்சுமைக்குள் சிக்காது பாதுகாக்கபடுவார்கள் அதே நேரத்தில் இளம் விதவைகள் விடயங்களில் அவர்களுக்கான அரச வேலைவாய்புக்கள் அல்லது மீள் வாழ்தல் நிலையை உறுவாக்க வழி ஏற்படுத்துவது சிறந்ததாகும்.

அதே நேரத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர் விடயம்  யுத்த விசாரணை சரணடைந்தவர்களின் விடயம் தொடர்பாக அரசாங்கம்  உண்மையான பதிலை வழங்குவதே வடக்கு கிழக்கு பெண்களின் மனநல ரீதியான பாதிப்பை குறைப்பதற்கான சிறந்த வழியாகும் அதே நேரத்தில் யுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என உளநல மருத்துவ அதிகாரிகளை நியமிப்பதும் அவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளை மேற்கொள்வதும்  சிறப்பாகும்.

அதே போன்று பல வருடங்களாக அரசியல் கைதிகள் எனும் போர்வையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்து அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுதுவதும் காலத்தின் தேவையாகும்.

அனைத்தையும் இழந்து நிர்கதியாகியுள்ள ஈழபெண்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிவாரணங்களுக்கு காத்திருக்கும் நிலை மாறி காத்திரமான சமூக பங்கை பெறும் போதே எம் இன பெண்களுக்கு மகளீர் தினமாகும்.
-ஜோசப் நயன்-






மகளிர் தினம்-யுத்தப்பாதிப்பில் இருந்து மீள முடியாத ஈழத்துப் பெண்கள்-படங்கள் Reviewed by Author on March 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.