அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியான பட்டியல் -


உலக அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்துவித நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகப் பொருளாதாரத்தை முன்னோடியில்லாத வகையில் நிச்சயமற்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் இதுவரை இதற்கு மருந்தேதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்தக் கொடிய தொற்று நோய் பரவுவதை எதிர்த்துப் போராடி வருகின்றன.

இந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட கடும் இழப்புகளில் இருந்து அதி விரைவில் மீண்டெழும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் முதல் இடத்தை நோர்வே பிடித்துள்ளது. இருப்பினும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சிறபாக செயல்பட்ட நாடாகவும், உலக நாடுகளுக்கே முன்மாதிரியாகவும் இருக்கும் நாடாக டென்மார்க் உள்ளது.


ஊழலற்ற அரசு நிர்வாகம் கொண்ட டென்மார்க்கில், கொரோனா பரவலை எதிர்கொள்ள சமூக விலகல் கட்டாயம் என்ற நிலை வந்தபோது, அதை உரிய முறையில் செயல்படுத்திய நாடு டென்மார்க்.
மார்ச் 11 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டன. மார்ச் 14 ஆம் திகதி நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 சத்வீத தொழிலாளர்களுக்கும் உரிய பொருளாதார உதவிகள் மேற்கொள்ளப்பட்டது. மட்டுமின்றி டென்மார்க் மக்கள் அன்றாடும் பழகும் அவர்களது கலாச்சாரமே கொரோனா பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ள அவர்களுக்கு உதவியுள்ளது.

கொரோனாவுக்கு பின்னர் மீண்டெழும் நாடுகளின் பட்டியல்
  1. நோர்வே
  2. டென்மார்க்
  3. சுவிட்சர்லாந்து
  4. ஜேர்மனி
  5. பின்லாந்து
  6. ஸ்வீடன்
  7. லக்சம்பர்க்
  8. ஆஸ்திரியா
  9. மத்திய அமெரிக்க நாடுகள்
  10. பிரித்தானியா
கொரோனா நெருக்கடிகளில் இருந்து மிக விரைவில் மீண்டெழும் உலகின் 10 நாடுகள்: வெளியான பட்டியல் - Reviewed by Author on April 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.