அண்மைய செய்திகள்

recent
-

40 மில்லியன் குழந்தைகள் ஊரடங்கால் பசியில் தூங்குகின்றனர்... இந்தியா நாட்டின் அவலம்! -


கொரோனா ஊரடங்கால், இந்தியாவில், கிட்டத்தட்ட 40 மில்லியன் குழந்தைகள் பசியில் தூங்க செல்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், கிட்டதட்ட 472மில்லியன் குழந்தைகளை கொண்டுள்ளது. இது உலக அளவில், அதிக குழந்தைகள் கொண்ட நாடாகும்.
இதில், கிட்டத்தட்ட 40 மில்லியன் குழந்தைகள் தின வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர். அவர்கள், விவசாயம் தொடர்பான வேலைகள், சாலைகளில் பொருட்கள் விற்கும் வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

இந்த குழந்தைகளின் வாழ்க்கை ஊரடங்கால், பல குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் என்ன உண்பது எப்படி நாட்களை கழிப்பது போன்றவற்றில் மிக குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
Chetna என்னும், குழந்தை தொழிலாளர்கள் நல சங்கத்தின் இயக்குனர் சஞ்சை குப்தா பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவில், வீடற்ற குழந்தைகள் பெரும்பாலும், உள்ளனர். அவர்கள் தெருக்களிலும் பாலங்களுக்கு அடியிலும் படுத்துறங்குகின்றனர்.

இந்த ஊரடங்கு காலத்தில், அனைவரையும் வீடுகளில் இருக்க அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், இந்த குழந்தைகள் என்ன செய்வார்கள்.
சஞ்சை குப்தாவின் தகவலின்படி டெல்லியில் மட்டும் 70,000க்கும் அதிகமான தெருக்களில் வசிக்கும் குழந்தைகள் உள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளார்.
அவர்களிடம் பெரும்பாலும், மொபையில்கள் உள்ளனர். எனவே Chetna-ன் மூலமாக அவர்களுக்கு விழிப்புணர்வு வீடியோக்களை நாங்கள் அனுப்புகிறோம். அவர்கள் பதிலுக்கு சில வீடியோக்களை அனுப்புகின்றன. அவை அவர்கள், வாழ்க்கையில் இருக்கும் எதிர்கால பயத்தை உணர்த்துகிறது.
தொடர்ந்து சில குழந்தைகள். தங்கள் பெற்றோர் வேலை இல்லாமல் இருப்பதால், வீட்டு வாடகை, ரேஷன் கடையில் அரிசி வாங்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு வீடியோ அனுப்பியதில், சிறுவன் ஒருவன், தான் இரண்டு மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாகவும், யாரோ ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து உணவு வந்து வழங்கியதாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவன் ஒருவன், நாங்கள் விறகு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல அனுமதிக்கபடவில்லை. நாங்கள் எப்படி வாழப்போகிறோம் என்று தெரியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். என்று குறிப்பிட்ட குப்தா, அரசு இதுபோன்ற குழந்தைகள் நாள் ஒன்றிற்கு மூன்று வேளை உணவருந்துகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஊரடங்குக்கு பின் அரசு வழங்கியுள்ள தொலைபேசி அழைப்புகளில், குழந்தைகள் தொடர்பான தகவல்கள் வழங்க கிட்டத்தட்ட 300,000 அழைப்புகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், 718 மாவட்டங்களில் 569 குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப்லைன் இயங்குகிறது. மேலும், 128 ரயில் நிலையங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான அழைக்கும் வசதி உள்ளது. இதில், அனைத்திலும் காணாமல்போன குழந்தைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என்று பல அழைப்புகள் நாள்தோறும் வந்தவண்ண உள்ளன.
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 மில்லியன் குழந்தைகள் ஊரடங்கால் பசியில் தூங்குகின்றனர்... இந்தியா நாட்டின் அவலம்! - Reviewed by Author on April 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.