அண்மைய செய்திகள்

recent
-

500000 பேரை கொல்லக் கூடிய பொருட்களை வைத்திருந்த நபர்! என்ன தெரியுமா?

அமெரிக்காவில் 5 மில்லியன் மக்களை கொல்ல கூடிய போதுமான போதை பொருளை கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த David Gayle என்ற 43 வயது நபரின் வீட்டை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வாரண்டை பெற்றனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 2.2 பவுண்ட் கொண்ட fentanyl, இது வலி மருந்தாகவும் மயக்க மருந்துக்கான பிற மருந்துகளுடனும் பயன்படுத்தப்படுகிறது.

fentanyl ஒரு பொழுதுபோக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவதுடன், இது பெரும்பாலும் ஹெராயின் அல்லது கோகோயினுடன் கலக்கப்படுகிறது.
இது விரைவான வீரியத்தை கொண்டுள்ளதால், அதன் விளைவுகள் பொதுவாக இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீடிக்கும்.
இது மட்டுமின்றி, கோகோயின், கஞ்சா, oxycodone(வலி நிவாரணி) ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக Hernando County Sheriff’s அலுவலகம் தெரிவித்துள்ளது.



Hernando County Sheriff’s அலுவலகத்தின் படி, கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில், 500,000-க்கும் அதிகமான மக்களைக் கொல்ல போதுமான fentanyl இருந்துள்ளது. இது கண்டுபிடிக்கப்படவில்லையெனில் அதிகப்படியான இறப்புகளுக்கு வழி வகுத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
David Gayle இப்போது fentanyl, கஞ்சா, கோகோயின், ஆக்ஸிகோடோன், போதைப்பொருள் சாதனங்கள் மற்றும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு அறியப்பட்ட ஒரு கட்டமைப்பு வைத்திருத்தல் போன்ற தனித்தனி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இதையடுத்து கடந்த புதன் கிழமை ஜாமீன் இல்லாமல், Hernando கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள David Gayle ஒரு விரிவான குற்றப்பிண்ணியை கொண்டிருப்பதாக Hernando கவுண்டி சிறைச்சாலை பதிவுகள் காட்டுவதாகவும், அதுவும் போதை பொருள் குற்றம் தான் என்று கூறப்படுவதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிகப்படியான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதால் அமெரிக்காவில் அகால மரணங்கள் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.‌
துப்பாக்கிச் சூடு, சாலை விபத்துகளை காட்டிலும் இந்த பழக்கத்‌தால் உயிரிழப்போர் எண்ணிக்கை கூடுதலாக இரு‌க்கிறது.

நகரம், கிராமம் என பாரபட்சமின்றி அந்நாட்டில்தான் அளவுக்கு அதிகமானோர் போதை பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து வருவதாக கூறப்படுகிறது.

தொற்று நோய் மூலம் பரவிவரும் இந்தப் ப‌ழக்கத்துக்கு கடந்த 2015-‌ஆம் ஆண்டில் மட்டும் 33000 பேர் தங்கள‌து உயிரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

500000 பேரை கொல்லக் கூடிய பொருட்களை வைத்திருந்த நபர்! என்ன தெரியுமா? Reviewed by Author on April 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.