அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்கு 6 மாதங்களுக்கு நீடித்தால்-பிரித்தானியர்கள் 50,000 பேருக்கு சிக்கல்: பகீர் தகவல் -


பிரித்தானியாவில் ஊரடங்கு ஆறு மாதங்களுக்கு நீடித்தால் 50,000 புற்றுநோய் நோயாளிகள் முன்கூட்டியே இறக்க நேரிடும் என்று முதன்மை மருத்துவர் எச்சரித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், புற்றுநோயாளிகளின் சிகிச்சை கேள்விக்குறியாக மாறியுள்ளது உண்மையில் அது மரண தண்டனைக்கு ஒப்பாகும் என்கிறார் பிரபல மருத்துவர் Karol Sikora.
கொரோனா பரவல் காரணமாக இன்று பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் அறிகுறிகள் ஏதும் அறியாமல் வாழ்ந்து வருவதாக அவர் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் புற்றுநோயை கண்டறியும் முக்கிய சோதனைகள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வாரத்திற்கு 2300 புற்றுநோய் தொடர்பான சோதனைகளை தவற விடுவதாக பிரித்தானியாவின் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கணக்கிட்டுள்ளது.

இதே நிலை நீடிக்கும் எனில், அடுத்த சில ஆண்டுகளில் பிரித்தானியாவில் சுமார் 50,000 பேர் புற்றுநோயால் இறக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக ஒரு மாதத்திற்கு சுமார் 30,000 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஏப்ரல் மாதத்தில் இது 5,000 க்கும் குறைவாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், உரிய சோதனைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதே என்கிறார் மருத்துவர் Sikora.


ஊரடங்கு 6 மாதங்களுக்கு நீடித்தால்-பிரித்தானியர்கள் 50,000 பேருக்கு சிக்கல்: பகீர் தகவல் - Reviewed by Author on April 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.