அண்மைய செய்திகள்

recent
-

மதங்களின் உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்! சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை -

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தேவை என்பது அவசியம் என்ற சந்தர்ப்பத்தை தவிர்ந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக மரணமானவர்களின் இறுதி சடங்குகளின் போது மதங்களின் உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இந்தக்கோரிக்கையை இன்று விடுத்துள்ளது.
இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மரணத்தை தழுவிய இரண்டு முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் உறவினர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தகனம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கஸ்டமான சூழ்நிலையில் அதிகாரிகள் சமூகங்களை இணைக்கவேண்டுமே தவிர அவற்றுக்கு இடையிலான பிரிவுகளை ஆழப்படுத்திவிடக்கூடாது.

சர்வதேச ஒழுங்குவிதிகள் இறந்தவர்களை அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி வழியனுப்பி வைக்கமுடியும் என்பதை வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்பு சபையின் தென்னாசிய பணிப்பாளர் பிராஜ் பட்நாய்க் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு முகாமைத்துவம் என்ற அடிப்படையில் உலக சுகாதார மையம் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்ய அல்லது தகனம் செய்யமுடியும் என்று கூறுகிறது.
இலங்கை அரசாங்கம் 2020 மார்ச் 27ம் திகதி வெளியிட்டுள்ள ஒழுங்குவிதிகளில் உலக சுகாதார மையத்தின் விடயங்கள் பிரதிபலிக்கப்பட்டிருந்தன.
எனினும் மார்ச் 30ம் திகதியன்று இலங்கை அரசாங்கத்தினால் மீளமைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின்படி கொரோனா வைரஸால் மரணமானவர்கள் தகனம் செய்யப்படவேண்டும் என்று மாற்றியமைக்கப்பட்டது.

உலக சுகாதார மையத்தின் ஒழுங்குவிதிகளில் இருந்து அப்பாற்பட்ட இந்த மாற்றியமைப்புக்காக இலங்கை அரசாங்கம் உரிய நியாயங்களை வெளியிடவில்லை என்று மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் இனங்குழுமங்களுக்கு இடையில் பாகுபாட்டை காட்டாது. இதனால் அனைத்து மதத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் காரணமாக இன்று மனித குலம் ஒன்றுபட்டுள்ளது. எனவே மனித குலம் ஒன்றிணைந்து இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும்.
அத்துடன் சுகாதார அதிகாரிகள், பணியாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கி கொரோனா வைரஸ் ஆபத்தில் உள்ளவர்களாக அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
மதங்களின் உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்! சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை - Reviewed by Author on April 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.