அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிப்பு! அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு முடிவுகள் -


கொரோனா தொற்றால், நுரையீரல் மட்டுமல்லாமல் இதயம், சிறுநீரகம், குடல், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால், 20,84,723பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30ஆயிரத்தை கடந்துவிட்டது.
இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழப்பு, நுரையீரலில் உள்ள சிறிய காற்று பையில் வீக்கத்தை ஏற்படுத்தி அடைப்பதன் மூலம் ஆக்சிஜன் விநியோகம் தடைப்பட்டு மூச்சுத் திணறல் உருவாவதால் ஏற்படுவதாக கருதப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கண்டறியப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ், நுரையீரல் மட்டுமல்ல இதயம், சிறுநீரகம், நரம்பியல் செயலிழப்பு, இரத்தம் உறைவு, குடல் பாதிப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு ஆகியவை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் 19ல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பாதிப் பேரின் சிறுநீரில் ரத்தம் அல்லது புரதம் இருப்பதால் அவர்களின் சிறுநீரகங்களுக்கு ஆரம்பத்திலேயே சேதம் ஏற்படுகிறது என அமெரிக்காவின் Yale University School of Medicine-ன் சிறுநீரக நிபுணர் Alan Kliger கூறியுள்ளார்.

இதுபோன்ற பாதிப்புள்ள நோயாளிகளுக்கு டயாலிசிஸ் கட்டாயம் தேவைப்படுவதாகவும் அதற்கான போதுமான பணியாளர்கள் இல்லாததால் நியூயார்க்கில் உள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிக மக்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுவதை தன் மருத்துவ வாழ்வில் பார்த்ததில்லை என்றும் இது தனக்கு மிகவும் புதிதாக இருப்பதாகவும் Kliger குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல வுகானில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலில் நடந்த பிரேதப் பரிசோதனையில் 26 பேரில் 9 பேருக்குக் கடுமையான சிறுநீரகப் பாதிப்பு இருந்ததும் 7 பேருக்குச் சிறுநீரகங்களில் கொரோனா வைரஸின் துகள்கள் இருந்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாக, கிட்னி இன்டர்நேஷனல் என்ற மருத்துவ இதழில் வெளியான வுகான் விஞ்ஞானிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சிறுநீரகத்தைப் போலவே இதயத்தையும் பாதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சீனா மற்றும் நியூயார்க்கில் உள்ள மருத்துவர்கள் தாங்கள் பரிசோதித்த கொரோனா நோயாளிகளுக்கு மாரடைப்பு, இதய தசை அழற்சி, மிகவும் ஆபத்தான மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்ததாகச் கூறுகின்றனர்.
நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கினாலும் திடீரென அவர்களின் இதயத் துடிப்பு சீரற்ற நிலையில் இருந்ததாக கொலம்பியா பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் Mitchell Elkind கூறியுள்ளார். இதேபோல் நரம்பு, குடல், கல்லீரல் ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் இதயம் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிப்பு! அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு முடிவுகள் - Reviewed by Author on April 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.