அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு -


கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்குட்பட்ட மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அட்டவணையை வெளியிட்டிருந்தது.
இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டுடிருக்கும் வேளையில் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என நிர்வாகக்குழுவுக்கு தொடர்ந்து பரிந்துரை செய்யப்பட்டு போட்டியை ஒத்திவைப்பதாக பிபா அறிவித்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் பிபா கவுன்சிலால் நிறுவப்பட்ட பிபா-கூட்டமைப்பு செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது.

அதில் இக்கூட்டத்தில், உலக கோப்பை போட்டியை ஒத்திவைக்கும்படி முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைபெறவிருந்த சர்வதேச போட்டிகள் (ஜூன் 2020 வரை) மற்றும் யு-17 மற்றும் யு-20 மகளிர் உலகக் கோப்பை உள்ளிட்ட அனைத்து பிபா போட்டிகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2022 உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை குறித்து, கூட்டமைப்புகளுடன் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு - Reviewed by Author on April 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.