அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் எப்போது குறையும்? உலக பிரசித்தி பெற்ற நாடி ஜோதிடரின் கணிப்பு -


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வரும் 13-ஆம் திகதிக்கு பின் படிப் படியாக குறையும் என்றும், இது இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று தமிழகத்தின் வைத்தீஸ்வரன் கோவில் பிரபல நாடி ஜோதிடர் கணித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகில் பல லட்சம் உயிர்கள் போயுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இந்த வைரஸ் இப்போது தான் மெல்ல மெல்ல சமூக பரவலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இருப்பினும், தமிழகம் மற்றும் கேரளாவில் இந்த நோயின் பாதிப்பு மற்ற பாதிக்கப்பட்ட சில மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, அந்தளவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பே இல்லை.
இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்கம், மே, 13-ஆம் திகதிக்கு பின், படிப்படியாக குறையும். இந்த வைரஸ், இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என, தமிழகத்தில் இருக்கும், வைத்தீஸ்வரன் கோவில் பிரபல நாடி ஜோதிடர் கணித்துள்ளார்.
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் என்ற ஊரில், தையல்நாயகி அம்மாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

தனி சன்னிதி கொண்ட இக்கோவிலில், நவக்கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வமுத்துக்குமார சுவாமி மற்றும் தன்வந்திரி சித்தர், தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளிஉள்ளனர்.

இக்கோவிலில் வழங்கப்படும் திருச்சாந்து உருண்டை மூலம், 4,448 வியாதிகள் குணமடைவதாக கூறப்பட்டு வருகிறது.
இத்தலத்தில் பார்க்கப்படும் நாடி ஜோதிடம், உலக பிரசித்தி பெற்றது. தேர்தல் கூட்டணி அமைப்பது, திருமணம், தொழில் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளை, நாடி ஜோதிடம் மூலம் துல்லியமாக கணித்து சொல்வது, இங்குள்ள ஜோதிடர்களின் சிறப்பாகும்.
இதனால், நாள்தோறும் ஏராளமானோர் நாடி ஜோதிடம் பார்த்துச் செல்வர்.
கலியுகம்தற்போது, உலகையே அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து, பிரபல நாடி ஜோதிடர் டாக்டர் சிவசாமி கணித்து கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கம், கலியுகத்தில் ஏற்பட்ட மாற்றங்களாலும், கழிவுகளாலும் உருவானது.

ஏப்ரல், 14 முதல் மே, 13-ஆம் திகதி வரை, மேஷ ராசியில் சூரியன் வரும் காலகட்டத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து, மே, 13-க்கு பின், படிப்படியாக குறையும்.
கொரோனா வைரசால், இந்தியாவிற்கு பெரும் ஆபத்து கிடையாது. இந்த ஆபத்தில் இருந்து காத்துக் கொள்ள, மக்கள், நாட்டையும், வீட்டையும், தங்களையும் துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் எப்போது குறையும்? உலக பிரசித்தி பெற்ற நாடி ஜோதிடரின் கணிப்பு - Reviewed by Author on April 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.