அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றால் 2 லட்சத்து 58000 பேர் பலி! ஐரோப்பாவில் பிரித்தானியா முதலிடம் -

கொரோனா வைரஸ் உயிரிழப்புக்கள் உலகம் முழுவதும் 2 லட்சத்து 58 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஐரோப்பாவில் பிரித்தானியா நேற்று முதல் இடத்துக்கு வந்திருக்கிறது.

ஏற்கனவே ஐரோப்பாவில் இத்தாலியிலேயே 29 ஆயிரத்து 315 என்ற எண்ணிக்கையில் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன.
எனினும் நேற்று பிரித்தானிய அதனை முந்தியிருக்கிறது. அங்கு நேற்றுடன் கொரோனா உயிரிழப்புக்கள் 29 ஆயிரத்து 427ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் முடிவுறுத்தப்படும் வரை எதனையும் கூறமுடியாதுள்ளதாக பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனாவுக்கான தடுப்பு மருந்துக்கான ஆரம்ப கட்ட ஆய்வில் இந்திய மருந்து நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 30 தடுப்பு மருந்துகள் வெவ்வேறு முன்னேற்ற நிலையில் உள்ளன. சில நிறுவனங்கள் பரிசோதனை கட்டத்தை அடைந்து விட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழகத்தில் புதிதாக 508 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் 2 லட்சத்து 58000 பேர் பலி! ஐரோப்பாவில் பிரித்தானியா முதலிடம் - Reviewed by Author on May 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.