அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் வேலையின்மை நலனைக் கோருபவர்களின் எண்ணிக்கை 2.1 மில்லியனாக உயர்வு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று முடக்கநிலையின் முதல் முழு மாதமான ஏப்ரல் மாதத்தில், பிரித்தானியாவில் வேலையின்மை நலனைக் கோருபவர்களின் எண்ணிக்கை 2.1 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 856,500 அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓ.என்.எஸ்) தெரிவித்துள்ளது.

தனி தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலக தரவுகளின் படி, கடந்த மார்ச் மாதம் முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவின் வேலையின்மை 50,000 அதிகரித்து 1.35 மில்லியனாக உயர்ந்துள்ளது.

வேலையின்மை வீதம் 3.9 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் சற்று குறைந்துவிட்டது என்று தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று முடக்கநிலை தொடங்குவதற்கு முன்பு, வேலைவாய்ப்பு சாதனை அளவை எட்டியது.

வேலையின்மை நலனைக் கோருபவரின் எண்ணிக்கையில் வேலை இல்லாத அனைவரையும் சேர்க்க முடியாது. ஏனென்றால் அனைவருக்கும் உதவி கோர உரிமை இல்லை. ஆனால் இது வேலைவாய்ப்பு சந்தையில் உள்ள போக்கைக் குறிக்கிறது.
பிரித்தானியாவில் வேலையின்மை நலனைக் கோருபவர்களின் எண்ணிக்கை 2.1 மில்லியனாக உயர்வு! Reviewed by NEWMANNAR on May 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.