அண்மைய செய்திகள்

recent
-

இலுப்பைக்கடவை கமநல சேவை நிலையத்தால் பல இலட்சம் அரச வருமானம் இழப்பு-அதிகாரிகளும் உடந்தை என மக்கள் குற்றச்சாட்டு.


மீள் குடியேற்றத்தின் போது நலிவுற்ற விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் விவசாய செய்கையை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தால் ஒவ்வொரு கமநல சேவை நிலையங்களுக்கும் இந்திய அரசாங்கத்தினால் உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

 குறித்த உழவு இயந்திரம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவை நிலையத்திற்கும்   15 உழவு இயந்திரங்கள் , இரண்டு பெட்டி , பல வகையான கலப்பைகள் வழங்கப்பட்டது.

இந்த உழவு இயந்திரங்களை தவறான நோக்கில் அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகின்றதாகவும் சுய விருப்பின் அடிப்படையில் பகிர்ந்தளித்ததாகவும் விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்ட நோக்கத்தை விடுத்து விவசாயிகள் எனும் போர்வையில் அரச ஊழியர் , தனவந்தர்கள்,  ஒப்பந்ததாரர்கள் ,   சொந்தமாக உழவு இயந்திரங்கள் வைத்திருப்போர் , மண் வியாபாரிகள் , குறிப்பாக  ஒருவருக்கு இரண்டு உழவு இயந்திரங்கள் என வழங்கப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவர்கள் அரச உழவு இயந்திரத்தை பயன்படுத்தி  நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை உழுவதுடன் வேறு பல வேலைகளிலும் சிலர்  ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 வெளி மாவட்டங்களிலும் இந்த உழவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த உழவு இயந்திரத்தை பயன்படுத்தி பல லட்சக்கனக்கான லாபத்தை பெற்றுகொண்டவர்கள்  கமநல சேவை நிலையத்திற்கு மிகச் சிறிய தொகை பணத்தையே செலுத்தியுள்ளனர். இரண்டு வருடங்களில் சிலர் பத்தாயிரம் ரூபாவே செலுத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
<i></i>
இந்த ஊழல் முறைக் கேட்டை பல விவசாயிகள் சுட்டிக்காட்டிய போதும் அதிகாரிகள் அலட்சியமாகவே நடந்து கொள்கின்றனர என விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால்  அரசாங்கத்திற்கு பல இலட்சம் ரூபாய் நஸ்ரம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அரச சொத்துக்களை முறைக் கேடாக பயன்படுத்தி மோசடி செய்தமைக்காக உரிய அதிகாரிகளுக்கு எதிராக    அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

</div>







இலுப்பைக்கடவை கமநல சேவை நிலையத்தால் பல இலட்சம் அரச வருமானம் இழப்பு-அதிகாரிகளும் உடந்தை என மக்கள் குற்றச்சாட்டு. Reviewed by Admin on May 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.