அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட சூழலினை காப்பாற்றி வேளைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைக்க வேண்டும்-

 நாட்டிலும் கொரோனா தாக்கம்   இருக்கின்றது. நாங்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்துள்ளோம். பொருளாதாரம் இல்லாமை, பட்டினி போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளோம்.

நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து காப்பாற்றப்பட்ட இந்த சூழலினை காப்பாற்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் சகல விடையங்களுக்கும் மக்களாகிய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.

செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தினால் பாதீக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு உற்பட்ட மக்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (8) காலை தலைமன்னாரில் இடம் பெற்றது.

-மன்னார் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜே.ஜே.கெனடி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் பிரதேச செயலாளர்எம்.பிரதீப் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு இரண்டு மாதங்களை கடக்கின்றோம்.நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்காத புது வித அனுபவம். பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளோம்.

எமது நாட்டில் கொண்டு வரப்பட்ட விசேட சட்ட திட்டங்களுக்கு அணைவரும் மதிப்பளித்து சமூக இடை வெளிகளை கடைப்பிடித்து வீடுகளில் இருந்ததினால் நாங்கள் இன்று இந்த இடத்தில் இருந்து கதைக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பாட்டுள்ளது.

ஏனைய அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகள் இன்று ஆட்டம் கண்டுள்ள நிலமை இருக்கின்றது.கொரோனா முழுமையாக பரவி எதுவும் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

எமது நாட்டில் இவ்வாறான சூழ் நிலை இருக்கின்றது. நாங்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்துள்ளோம். பொருளாதாரம் இல்லாமை, பட்டினி போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளோம்.

இவ்வாறு நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து காப்பாற்றப்பட்ட இந்த சூழல்  தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எதிர் வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து மன்னார் மாவட்டம் வழமைக்கு திரும்புகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் திங்கள் முதல் வழமை நிலைக்கு மாவட்டம் கொண்டு வரப்படுகின்றது.எனினும் மக்கள் உங்களுடைய தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுங்கள்.முன்பு போல் எல்லாம் முடிந்து விட்டது என நினைத்து வெளியில் செல்ல வேண்டாம். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.இது வரை முற்றாக அழிக்கப்படவில்லை.

காய்ச்சல் மற்றும் எவ்வித அறிகுறிகளும் இன்றி காவிகலாக பலர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எங்களுக்கு கூட கிருமி இருக்கலாம்.

எங்களுக்கு தாக்கம் இல்லாமல் இருக்கலாம். இன்னும் ஒருவருக்கு பரவுகின்ற போது அதன் தாக்கம் இருக்கலாம்.எனவே முகக்கவசம் அணிவதில் இருந்து கைகளை சுத்தப்படுத்துதல்,சமூக இடை வெளிகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

இவ்விடையங்களை நீங்கள் ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை இந்த இடத்தில் சுமார் 3500 ரூபாய் பெறுமதியான வவுச்சர்களை மக்களுக்கு வழங்குகின்றனர்.

அதனை சதொசா விற்பனை நிலையங்களுக்கு கொண்டு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
செஞ்சிலுவை தினமான இன்று (8) அவர்கள் நாடு பூராகவும் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்துள்ளனர்.

கொரோனா தாக்கத்தின் தற்போதைய காலத்தில் இவ்வாறான உதவிகள் கிடைப்பது பெரிய விடையம்.
 பாதீக்கப்பட்ட,உதவிகள் கிடைக்காத குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு குறித்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-நீங்கள் சதொசா விற்பனை நிலையங்கள் ஊடாக உங்களின் வவுச்சர்களை கொடுத்து உங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

-இதன் போது தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்றுசுமார் 3500 ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய வவுச்சர் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட சூழலினை காப்பாற்றி வேளைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைக்க வேண்டும்- Reviewed by Admin on May 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.