அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.


ஆசிரியர்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுடைய ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

 இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,, நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலைமை கடந்த இரண்டு மாத காலமாக அனைத்துத் தரப்பினரும் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

 இந்த நிலையில் அரச அலுவலகங்கள் , பாடசாலைகள் தனியார் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையை கருத்தில் கொண்டு தற்போது ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோரியுள்ளார். அரச அதிகாரிகள் ஆசிரியர்கள் என அனைவரும் வங்கி கடன் சுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கடனை மீள செலுத்தும் காலம் பின் போடப்பட்டு இருந்தாலும் அந்த கடன் தொகைக்கான வட்டி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 

 அரசாங்கம் வட்டியை நிறுத்துவதாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோரும் நிலைப்பாட்டை மாற்றி அவர்களின் சம்பளத்தை முழுமையாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். Reviewed by Author on May 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.