அண்மைய செய்திகள்

recent
-

மலேசியாவில் தேடுதல் வேட்டை: கடத்திச் செல்லப்பட்ட இந்தோனேசிய குடியேறிகள் கைது

மலேசியாவில் Sarawak  பொது நடவடிக்கை படை நடத்திய தேடுதல் வேட்டையில், 8 சட்டவிரோத குடியேறிகளை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் Sarawak மாநிலத்தில் உள்ள Kampung Mapu Kijabu, Serian பகுதியில் ‘Op Benteng’ நடவடிக்கையின் கீழ் இத்தேடுதல் வேட்டை நடைபெற்றுள்ளது. 


தேடுதல் வேட்டையின் போது இரண்டு வாகனங்களை சோதனையிட்ட படையினர், வாகனங்களிலிருந்து 8 குடியேறிகளையும் அவர்களை கடத்த முயன்ற 2 பேரையும் கைது செய்துள்ளனர். 


இதில் கைது செய்யப்பட்ட குடியேறிகள் அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார் கட்டளை அதிகாரி Rosdi Inai. 


இந்த கைது தொடர்பாக 1959 மலேசிய குடிவரவுச் சட்டம், 2007 ஆட்கடத்தல் தடுப்பு சட்டத்தின் (Anti-Trafficking in Persons and Anti-Smuggling of Migrant Act) கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.



மலேசியாவில் தேடுதல் வேட்டை: கடத்திச் செல்லப்பட்ட இந்தோனேசிய குடியேறிகள் கைது Reviewed by Author on June 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.