அண்மைய செய்திகள்

recent
-

விடத்தல் தீவு மீனவர்களுக்கு போலீசாரால் கருத்தரங்கு.......

மன்னார் மாந்தை மேற்கு அடம்பன் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் விடத்தல் தீவு பாப்பா மோட்டை ஆகிய கரை யோர மீனவர்களுக்கு கருத்தரங்கு இன்று காலை 10:00 மணயளவில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது...

இதில் முக்கிய விடயமாக கோவீட் 19 கோரோனா தாக்கம் காரணத்தால் ஆல்கடல்பகுதிக்கு தொழில் மற்றும் அட்டை குளிக்க செல்லவேண்டாம் எனவும்  இந்தியாவில் இருந்து வரும் மீனவர்களை ஏற்றிவருவதாக
சந்தேகிக்கப்படுகின்றீர்கள் அதனை நிறுத்தவும் அத்தோடு தொழிலுக்கு செல்பவர்கள் அந்த தொழிளுக்கான அனுமதி அட்டயை பெற்றிருக்க வேண்டும் எனவும் இரவில் அட்டைக்கு செல்ல முடியாது எனவும் வழியுறுத்தப்பட்டிருந்தது...


போலீசார் நீரியல் பரிசோதகர் ஆகியோர் மேலும் கூறுகையில்...

அத்தோடு கரையோரத்தில் அனுமதி இன்றி வாடிகள் கட்டங்கள் அமைக்கவேண்டாம் அப்படி அமைப்பதாயின் அனுமதி பெற வேண்டும் எனவும் கூறப்பட்டது.

 இக் கருத்தரங்கு கலந்துரையாடலுக்கு மன்னார் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி,  அடம்பன் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, அடம்பன் பிரதேச சுகாதார பரிசோதகர், விடத்தல் தீவு நீரியல் வள அலுவலக நிரியல் பரி சோதகர்,  கிராம அலுவலர், மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விடத்தல் தீவு மீனவர் சங்கத்தலைவர் மற்றும்  செயலாளர் சன்னார் மௌவி, விடத்தல் தீவு மீனவர்கள், பாப்பாமோட்டைமீனவர்கள் என பலரும் இவ்கருத்தரங்கில் கலந்து கொண்டு  கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


விடத்தல் தீவு மீனவர்களுக்கு போலீசாரால் கருத்தரங்கு....... Reviewed by Author on June 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.