அண்மைய செய்திகள்

recent
-

இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தொடரும் - கருணா

அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்க என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலய தமிழர் இளைஞர் ஒன்றியம் தலைவர் நிமலன் தலைமையில் (6) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் கூறியதாவது இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை நாம் முன்னெடுப்போம். த.தே.கூட்டமைப்பை உருவாக்கியது நானே. ஆனால் சம்பந்தர் ஐயா ´அப்படியில்லை புலிகளால் உருவாக்கப்படவில்லை ´என்று கூறுகிறார். உண்மையில் அக்கட்சி உருவாக்கத்தின்போது அருகில் நானிருந்தேன். இன்றும் உயிருடனும் இருக்கிறேன். இதனை எப்படி மறைப்பது. அம்பாறை மாவட்ட தமிழ்மகளின் இருப்பைப்பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம் என நினைத்து தான் அம்பாறைக்குவந்துள்ளேன். ஆனால் எனது வருகையை அடுத்து இங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புளிக்கரைக்குது. கூடவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் பயம்வந்துவிட்டது.

கடந்த 4 அரை வருடகாலம் எமது மக்களை சீரழித்துவிட்டார்கள். கொந்தராத்து, மரவியாபாரம், மண்வியாபாரம் இதுதான் அவர்கள் செய்த சேவைகள், சாதனைகள் வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு இன்று மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்கள். எனவே எமது சின்னம் கப்பல். அது வெறும் கப்பல் அல்ல. தத்தளிக்க மக்களை காப்பாற்றி கரை சேர்க்கும் கப்பல். எனவே தத்தளிக்கின்ற அம்பாறை தமிழ் மக்களை காப்பாற்றி கரைசேர்க்கின்ற அக்கப்பலுக்கு வாக்களித்து வாழ்வை வளப்படுத்துவதோடு இருப்பையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் த.அ.கட்சி மூத்தஉறுப்பினர் கு.ஏகாம்பரம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அமைப்பாளர் ஒருவரும் கருணா அம்மானுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது...


இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தொடரும் - கருணா Reviewed by Author on July 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.