அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் 29 ஆவது அமர்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்....


மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி   மேலதிகமான மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை உடனடியாக அகற்ற மன்னார் நகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் 29 ஆவது அமர்வு இன்று(16) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது சபை உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்தனர்.குறிப்பாக மன்னார் பஸார் பகுதியில் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் மேலதிகமாக குறித்த வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கழிவு நீர் வடிகன்களுக்கு மேற்பகுதியிலும் கட்டுமானப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் மன்னார் நகர சபை பிரிவில் உள்ள வீடுகளுக்கு சுற்று மதில் அமைப்பது என்றால் கூட மன்னார் நகர சபையின் அனுமதியை பெற்று சுற்று மதில் அமைக்க வேண்டும்.

ஆனால் மன்னார் பஸார் பகுதியில் அதுவும் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான சில வர்த்தக நிலையங்களில் மேலதிகமாக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,கழிவு நீர் வடிகானுக்கு மேற்பகுதியிலும் கட்டுமானப்பணிகள் இடம் பெற்றுள்ளது.

எனவே குறித்த நடவடிக்கைகளுக்கு உடனடியாக மன்னார் நகர சபை உரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த கட்டுமான பணிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகர சபை உறுப்பினர்களான மைக்கல் கொலின் மற்றும் ஜோசப் தர்மன் ஆகியோர் கோரிக்கை முன் வைத்தனர்.

-இதன் போது சபை உறுப்பினர்கள் முழு ஆதரவை வழங்கினர்.இதன் போது எதிர் வரும் 14 நாட்களுக்குள் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணிகளை குறித்த வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள் அகற்ற வேண்டும்.
அல்லது மன்னார் நகர சபை குறித்த கட்டுமான பணிகளை அகற்றும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

-மேலும் மன்னார் பஸார் பகுதியில் மரக்கறி விற்பனை நிலையம் அமைந்துள்ள நிலையில் மரக்கறி வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் குறித்த வியாபாரிகளுக்கு பாதீப்பை ஏற்படுத்துகின்ற வகையில்  தனி நபர்கள் பஸார் பகுதியில் மரக்கறி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வியாபார நடவடிக்கைளில் ஈடுபடுபாவர்களுக்கு எதிராக   நடவடிக்கை மேற்கொள்ள சபையில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் உள்ளக வீதி புனரமைப்பு,நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகளை அடையாளப்படுத்துதல், நகர சபை பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை,சிரமதான பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட வேளைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும் மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்ட மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தை எதிர் வரும் 25 ஆம் திகதி மக்களின் பாவனைக்காக கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...










மன்னார் நகர சபையின் 29 ஆவது அமர்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.... Reviewed by Author on July 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.