அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் கொவிட்-19 வைரஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ...

நாட்டில் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதனை வடமாகாணத்தில்  கட்டுப்படுத்தும் நோக்குடன், நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் “இலண்டன் என்பீல்ட் நாகபூசணி” அம்மன் ஆலயத்தின் நிதி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த செயற்பாடானது வடமாகாணத்தின்  ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் பொதுஇடங்கள், அரசஅலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், கடைத்தெருக்கள்  மற்றும் முச்ச க்கரவண்டிகளில் இவ் விழிப்புணர்வு சுவரொட்டிகள் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து  யாழ்பேருந்து நிலையப்பகுதி,நல்லூர் ஆலயம்,
மற்றும் மன்னார் பிரதேச செயலகம், மன்னார் வலயக்கல்வி அலுவலகம், கிளிநொச்சி பொது நூலகம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் ம. பிரதீபன், , முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த,சத்தியமூர்த்தி, நல்லூர் பிரதேச செயலாளர் அ.எழிழரசி, கரைச்சி பிரதேச செயலாளர்,ஆகியோருக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அவை வடக்கில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் பொதுமக்கள் அதிகமாக வருகின்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் யாழ் ஊடக மன்றத்தினர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டமை முக்கியவிடயமாகும்...

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் கொவிட்-19 வைரஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ... Reviewed by Author on July 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.